கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் வளர்ச்சியுடன், வளரும் நாடுகள் தெரிவிக்கும் கருத்துக்களில் சர்வதேசச் சமூகம் கவனம் செலுத்தத் துவங்கியது. முக்கிய சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் சம்பவங்களின் போது, சீன வானொலி நிலையம் சீனாவின் கருத்தை விவரிக்கிறது. இது பற்றி ஹுங் லின் பேசிய போது:
"ஒரே நிகழ்வு தொடர்பாக, சீனச் செய்தியாளர்களும், மேலை நாட்டுச் செய்தியாளர்களும் வெவ்வேறான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சர்வதேச பொதுக் கருத்தில், தனது குரலை எழுப்பி, தனது கருத்துக்களைத் தெரிவிக்கும் கடமையை சீனச் செய்தியாளர்கள் ஏற்க வேண்டும். ஏனெனில், சில சமயங்களில், சீனச் செய்தியாளர்கள், சீனாவின் கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவர். இது மட்டுமல்ல, அவர்கள் வளரும் நாடுகளின் பார்வையைப் பிரதிநிதித்துவப்படுத்துவர். சீன செய்தி ஊடகங்கள், சர்வதேசச் சமூகத்தில் முக்கிய செய்திகளின் ஊற்றுமூலங்களில் ஒன்றாக மாறுவது, சீன செய்தி ஊடகங்களின் வளர்ச்சிக்கும், உலக அமைதி மற்றும் நிதானத்துக்கும் சாதகமாக அமையும்" என்று குறிப்பிட்டார்.
சீனச் சமூக வளர்ச்சியிலும், மாறி வரும் சர்வதேச நிலைமையிலும் கவனம் செலுத்தும் வேளையில், கடந்த சில ஆண்டுகளில், சீன வானொலி நிலையம், சர்வதேச தொடர்புச் சிந்தனையை தொடர்ந்து புதுப்பித்து, நாடு கடந்த, பிரதேசம் கடந்த பெரிய ரக நடவடிக்கைகளை நடத்தியுள்ளது. வெளிநாட்டு நேயர்கள் சீனாவை பற்றி அறிந்து கொண்டு, சர்வதேச நட்புறவை உருவாக்குவதற்கு பாலங்களை அமைத்துள்ளது.