2006ஆம் ஆண்டு, சீன-ரஷிய அரசுத் தலைவர்களின் தீர்மானத்துக்கிணங்க, சீன, மற்றும் ரஷிய ஆண்டு நடவடிக்கையை முறையே ஒன்று மற்ற தரப்பு நாட்டில் கூட்டாக நடத்தின. சீன வானொலி நிலையம் இதை வாய்ப்பாகக் கொண்டு, "சீன-ரஷிய நட்பு சுற்றுப்பயணம்—ரஷியப் பயணம்" என்ற பெரிய ரக நாடு கடந்த கூட்டு பேட்டி மற்றும் செய்தி அறிவிப்பு நடவடிக்கையை திட்டமிட்டு, செயல்படுத்தியது. ரஷியாவின் மாஸ்கோவில் உள்ள சிவப்பு சதுக்கம் (Red Square), சில பத்து சீனச் செய்தியாளர்களை வரவேற்றது. அப்போதைய ரஷியாவின் முதன்மை துணைத் தலைமையமைச்சரும், தற்போதைய ரஷிய அரசுத் தலைவருமான திமித்ரி மெத்வதேவ் அனுப்பிய வாழ்த்து மடல் ஒன்றில், "பயன்மிக்க, அளவில் பெரிய, தலைசிறந்த இந்நடவடிக்கை, சீனாவில் உள்ள 'ரஷிய ஆண்டு' என்ற செய்தி ஊடக நடவடிக்கையில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கிறது" என்று பாராட்டினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு பின், சீன வானொலி நிலையம் நடத்திய "சீன மக்கள் ரஷிய மொழிப் பாடல்களைப் பாடுவது" என்ற போட்டியின் விருது வழங்கும் விழாவில், சீனத் தலைமையமைச்சர் வென்ச்சியாபாவும், ரஷியத் தலைமையமைச்சர் விளாடிமிர் புதினும் கலந்து கொண்டனர். புதின் கூறியதாவது:
"வேறுபட்ட வயதும், வெவ்வேறான தலைமுறையுமான சீனர்கள், ரஷியப் பண்பாட்டில் ஆர்வம் கொண்டுள்ளனர் என்பது என் மனதில் ஆழப்பதிந்துள்ளது" என்றார் அவர்.
"சீன மக்கள் ரஷிய மொழி பாடல்களைப் பாடுவது" என்ற நடவடிக்கை, இரு நாட்டு மக்களுக்கிடை புரிந்துணர்வை அதிகரிக்கும். வென்ச்சியாபாவ் கூறியதாவது:
"சீனாவும், ரஷியாவும் நீண்டகால வரலாறுடைய மாபெரும் நாடுகளாகும். இரு நாட்டு மக்களின் மனத் தொடர்பு, இரு நாட்டுறவின் அடிப்படையாகும். உங்களுக்கு நன்றி்கள் பல. நீங்கள் மொழி மூலம் இரு நாட்டு மக்களுக்கிடை சிந்தனை மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை விரைவுபடுத்தியுள்ளீர்கள். இசை மற்றும் பாடல்கள் மூலம் இரு நாட்டு மக்களுக்கிடை புரிந்துணர்வை தூண்டியுள்ளீர்கள்" என்றார் வென்ச்சியாபாவ்.