சீன வானொலி நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொது அறிவுப் போட்டியை சிறப்பாக நடத்துகின்றோம். இந்தப் போட்டியின் 4வது கட்டுரையை இன்று வழங்குகின்றோம்.
முதலில் இன்றைய 4வது கட்டுரைக்கான 2 கேள்விகளை நீங்கள் கவனமாகக் கேளுங்கள்.
1. இதுவரை வெளிநாடுகளிலுள்ள சீன வானொலி நேயர் மன்றங்களின் எண்ணிக்கை எத்தனை?
2. சீன வானொலியின் முதலாவது நேயர் மன்றத்தின் பெயர் என்ன?
உலகின் பல்வேறு பிரதேசங்களில் உங்களைப் போல் எண்ணற்ற நேயர்கள் வானொலிப் பெட்டியின் அருகில் அமர்ந்து சீனாவிலிருந்து வந்த ஒலிபரப்பைக் கேட்கின்றனர். அவர்கள் சீனா பற்றிய செய்திகளைக் கேட்டு, சீனாவின் மாற்றங்களில் கவனம் செலுத்துகின்றனர். அவர்களில் பலர் ஒவ்வொரு அறிவிப்பாளரின் குரலையும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அறிந்து கொள்கின்றனர். சீன வானொலியின் ஒலிபரப்பைக் கேட்பது அவர்களுக்கு வழக்கமான ஒன்றாகிவிட்டது. இன்றைய நிகழ்ச்சியில் சீன வானொலிக்கும் அதன் நேயர்களுக்குமிடை நட்புறவு பற்றி கேளுங்கள்.