• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷெகரிலா என்ற பழைய வட்டம்
  2012-02-23 16:43:11  cri எழுத்தின் அளவு:  A A A   

ஷெகரிலாவில் ஒரு டு கே ஸோங் எனும் பழைய நகரம் அமைந்துள்ளது. அது மலையை சார்ந்து கட்டியமைக்கப்பட்டதாகும். ஏற்றத்தாழ்வான சாலையில் இன்றும் ஆழமான குதிரை காலடிகளை நாம் காண முடியும். du ke zong என்றால், திபெத் மொழியில் நிலா ஒளி நகரம் என்று பொருலாகும். 1300 ஆண்டுக்கால வரலாறுடைய அது, திபெத்தின் தனிச் சிறப்பு வாய்ந்த பழங்கால வீட்டு தொகுதிகள் முற்றிலும் பேணிகாக்கப்பட்டு வருகின்றன. தி ஜிங்கின் முக்கிய சுற்றுலாக் காட்சித் தலமாக, அது, பல பயணிகளையும் ஈர்க்கிறது.

பழைய சாலைகளில் நடந்து செல்லும் வெளிநாட்டு நண்பர்களை இங்கு அடிக்கடி பார்க்கலாம். சிலர் சுற்றுலாக் குழுவுடன் இங்கு பயணம் மேற்கொள்கின்றனர். சிலர் பல ஆண்டுகளாக இங்கேயே தங்கி வாழ்ந்து வருகின்றனர். முன்பு இங்கு காபியகத்தை துவக்கிய கனடாவின் நெயில் கிர்க்லேண்ட் தம்பதியை உங்களுக்கு அறிமுகப்படுத்தினேன். 2002ம் ஆண்டில் neil Kirkland சீனாவின் வூஹான் மாநகரில் ஆங்கில மொழி ஆசிரியராக பணி புரிந்தார். தவிரவும் அவர் சிஆன் நகரத்திலும் வசித்திருந்தார். பிறகு அவர்கள் ஷெங்கரிலாவுக்கு வந்து இங்கு தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவ்விடம் என்னை வியப்புக்கு உட்படுத்தியது. சீனாவில் இவ்வளவு அழகான இடம் இருப்பது எனக்கு தெரியாது. முன்பு பெரிய நகரங்களில் வசித்தோம். நான் சிஆன்னை மிகவும் விரும்புகிறேன். வூஹான்னையும் நான் விரும்புகிறேன். ஆனால் பெரிய நகரங்களில் மக்கள் தொகை மிக அதிகம். மாசுப்பாடும் ஒப்பீடளவில் கடுமையானது. எனவே இங்கு வந்து இப்படி அழகான காட்சியைக் கண்டு தூய்மையான காற்றை சுவாசித்து மகிழ்ச்சியடைந்தோம் என்று அவர் கூறினார்.

அவர்களைப் போல இங்கு வாழ்கின்ற வெளிநாட்டு நண்பர்கள் மிக அதிகம். அமெரிக்க வாஷிங்டனிலிருந்து வந்த எலன் பார்டீ ஷெகரிலாவை மிகவும் விரும்புகிறார்.

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040