• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷெகரிலா என்ற பழைய வட்டம்
  2012-02-23 16:43:11  cri எழுத்தின் அளவு:  A A A   

sang zan lin கோயிலைப் பார்ப்பதற்காகவே, நான் ஷெகரிலாவுக்கு வந்தேன். இவ்வாண்டு நான் திபெத்திற்கு ஒருமுறை சென்றேன். கடந்த ஆண்டு நான் சிங்காய்க்கு சென்றேன். சீனாவின் திபெத் மரபு புத்தமாதக் கோயில்கள் அனைத்தையும் நான் பார்க்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

தோற்றத்தில் song zan lin கோயில், திபெத்தின் போதலா மாளிகை போல உள்ளது. அது சிறிய போதலா மாளிகை என்று அழைக்கப்படுகிறது. யுன்னானில் பல்கலைக்கழகக் கல்வி பயில்கின்ற மாணவி hang xudan, தனது சகமாணவர்களுடன் ஷெகரிலாவுக்கு வந்து சித்திர வேலைகளைச் செய்கின்றார். அவர் சிறப்பாக இக்கோயிலில் பார்வையிடுகிறார். இங்குள்ள மாபெரும் கட்டிட தொகுதி புனிதமாக உள்ளது. அதை சுற்றி பெரிய மலைகள் உள்ளன. கோயிலில் நுழையும் போதே அழகான gesang மலர்கள் நம்மை வரவேற்கின்றன. இங்கு இயற்கையின் அழகும் மனிதகுலத்தின் வேலைப்பாடும் சீராக இணைந்து காணப்படுவது வியப்புக்குரியதாகும்.

Dukezong பழைய நகரமும் சரி, pu da cuo பூங்காவும் சரி, song zan lin கோயிலும் சரி, அவை ஷெகரிலாவின் ஒரு சிறிய பகுதியாகும். இந்த அழகான இடத்தை அறிய நேரில் இங்கு வர வேண்டும். உங்களை இங்கே வருகை புரியும்படி நாங்கள் வரவேற்கிறோம்.

 


1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040