13ம் நூற்றாண்டில் சாக்கியா பிரிவு, யுவான் வம்ச நடுவண் அரசின் அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவைப் பெற்றது. திபெத் பிரதேசத்தில் அது செழுமைப்பட்டு திபெத் மரபுவழி புத்த மதத்தின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது. தவிரவும், சாக்கியா பிரிவு, திபெத்தில் அரசியலையும், மதத்தையும் இணைக்கின்ற ஆட்சி முறைமையை உருவாக்கியுள்ளது. எனவே, சாக்கியா பிரிவின் சக்தி முழு திபெத் பிரதேசத்திலும் பரவியுள்ளது.