சேரா துறவியர் மடம், திபெத் மரபுவழி புத்தமத நம்பிக்கை உடைய கேலுக் பிரிவின் துறவியர் மடமாகும். அது, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகருக்கு வடமேற்குப் பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஒரு இலட்சத்து 15 ஆயிரம் சதுர மீட்டர் உடைய இத்துறவியர் மடம், 1419ம் ஆண்டு அமைக்கப்பட்டது. லாசாவின் மூன்று பெரிய துறவியர் மடங்களில் ஒன்றான சேரா துறவியர் மடத்தின் மதமறை விவாத நடவடிக்கைகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது.
1 2 3 4