அது, திபெத் மரபுவழி புத்தமத நம்பிக்கை உடைய கேலுக் பிரிவின் மூதாதையர் சோங்கப்பாவின் அழைப்பின் பேரில், அவரது மாணவர் பைமாஸ் சென்சோஸ் ர்ஜேவால் அமைக்கப்பட்டது. சோங்கப்பாவின் சார்பில், பைமாஸ் சென்சோஸ் ர்ஜே, நான்ஜிங்குக்குச் சென்று, மிங் வம்சத்தின் பேரரசருக்கு வணக்கம் செலுத்தினார். அதிகமான மதமறைகள், புத்தர் சிலைகள், புத்த ஆடைகள், தங்கம் மற்றும் வெள்ளியை, பேரரசர் அவருக்குக் கொடுத்தார். பைமாஸ் சென்சோஸ் ர்ஜே இவற்றை எல்லாம் பயன்படுத்தி, சேரா துறவியர் மடத்தைக் கட்டியமைத்தார்.