கி. பி. 1674ஆம் ஆண்டு, 5வது தலாய் லாமாவின் ஆலோசனையின்படி, சிங் வமிசத்தின் பேரரசர் காங் சி இத்துறவியர் மடத்தைக் கட்டியமைப்பதற்கு ஒப்புதல் அளித்தார். இத்துறவியர் மடத்துக்கு காடன் சுன்ச்சென்லின் என்ற பெயர் சூட்டப்பட்டது. இத்துறவியர் மடத்தின் கட்டமைப்பு, லாசா நகரில் உள்ள போதாலா மாளிகையின் கட்டமைப்பைப் போல் இருக்கிறது. இதனால் இத்துறவியர் மடம், சிறு போதாலா மாளிகை என அழைக்கப்படுகிறது. சுன்ச்சென்லின் துறவியர் மடம் கட்டிமுடிக்கப்பட்டதற்குப் பின், அது உள்ளூர்ப் பிரதேசத்தில் அரசியலையும் மதத்தையும் ஒன்றிணைக்கும் அமைப்பு முறையின் மிக உச்ச வாரியமாக மாறியுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு இடங்களிலிருந்து வந்த மத நம்பிக்கையாளர்கள் இத்துறவியர் மடத்துக்குப் புனித பயணம் மேற்கொள்கின்றனர்.