இத்துறவியர் மடம், தெற்கு நோக்கியதாய் வடக்கில் அமைந்துள்ளது. இது 5-மாடி திபெத் இன பாணியுடைய கட்டிடமாகும். 1600 துறவிகள் அதே மண்டபத்தில் மந்திரம் ஓதலாம். இம்மண்டபத்தின் இடது மற்றும் வலது சுவர்களில், திபெத் மரபுவழி புத்த மதத் திருமறை அலமாரிகள் இருக்கின்றன. இத்துறவியர் மடத்தின் முக்கிய மண்டபத்தின் முன் பக்கத்தில் 5வது தலாய் லாமாவின் வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின் பக்கத்தில், புகழ் பெற்ற மூத்த மத குருமாரின் பூதவுதல்கள் இருக்கும் கோபுரங்கள் வரிசையாகக் காணப்படுகின்றன.