பண்டைக் காலத்தில், திபெத் இனப் பிரதேசத்தில் புகழ் பெற்ற பல மூத்த மத குருமார், இத்துறவியர் மடத்தில் வாழ்ந்தனர். ஆண்டுதோறும் திபெத்தின நாட்காட்டியின்படி நவம்பர் 29ம் நாள், உள்ளூர் திபெத் இன மக்கள் இங்கே முகமூடி நடனத்தை முக்கியக் கொண்டாட்ட முறையாகக் கொண்டு கே துங் திருவிழாவை நடத்துகின்றனர். இங்கே மர்மமான, கோலாகலமான விழா சூழ்நிலை நிறைந்து காணப்படுகிறது.