தா ஏர் துறவியர் மடம், சீனாவின் வட மேற்குப் பகுதியிலுள்ள சிங்ஹாய் மாநிலத்தின் சி நிங் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. 14வது நூற்றாண்டில் அது நிறுவப்படத் துவங்கியது. சீனாவின் திபெத் புத்த மதத்தைச் சேர்ந்த கேலுக் பிரிவைத் துவக்கிய மதக்குருமார் சோங்கப்பாவின் பிறப்பிடத்தில் அது இருப்பதால், திபெத் புத்த மதத்தின் முக்கியத் துறவியர் மடமாக அது மாறியுள்ளது.