தரபுங் துறவியர் மடத்தில் நடைபெறும் Shoton விழா, மிக புகழ்பெற்றது. திபெத் மொழில் Shoton என்றால் தயிர் விருந்து என்று பொருள்படுகிறது 11ம் நூறாண்டு துவங்கிய தயிர் விழா, கோடைக்காலத்தில் மதநம்பிக்கையாளர்கள் துறவியர் மடத்திலுள்ள லாமாக்களுக்கு தயிர் வழங்கி, திபெத்தின கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதிலிருந்து உருவாகிய விழாவாகும். ஆண்டுதோறும் திபெத் நாட்காட்டியின்படி ஜூன் 30ம் நாள், ஆயிரக்கணக்கான மக்கள், துறவியர் மடத்திற்குச் சென்று, 5வது தலாய் லாமா மற்றும் அங்குள்ள லாமாக்களுக்கு தயிர் வழங்கி, வாழ்த்துக்கள் பெற்றனர். நாளடைவில் அதனை தயிர் விழாவாக கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டது.