இந்தக் கட்டுரை பற்றிய இரண்டு வினாக்கள்.
ஒன்று, ஹெய்நான் மாநிலத்தின் மூலவள மேம்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில், அம்மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக மாபெரும் முயற்சி மேற்கொண்டு வரும் வளர்ச்சி நெடுநோக்குத் திட்டம் என்ன? இரண்டு, ஹெய்நான் மாநிலத்தில் வரியில்லாக் கடைகள் அமைந்திருக்கும் இரண்டு நகரங்கள் எவை?
ஹெய்னான் மாநிலம், சீனாவின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இது சீனாவில் மிக பெரிய பொருளாதார சிறப்பு மண்டலமாகவும், ஓரே ஒரு வெப்ப மண்டல தீவு மாநிலமாகவும் திகழ்கிறது. இம்மாநிலம் "கீழை ஹவாய்" என்று போற்றப்படுகிறது. மேம்பாடுடைய நிலவியல் அமைப்பு, எழில் மிக்க இயற்கைக் காட்சிகள், செழிப்பான சிறுபான்மை தேசிய இனப் பண்பாடு ஆகியவற்றின் காரணமாக, ஹெய்நான் மாநிலம், மக்களை கவர்நதிழுக்கும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், ஹெய்னான் மாநிலத்தின் மூல வள மேம்பாட்டை முழுமையாக வெளிக்கொணரும் வகையில், "சர்வதேசத் சுற்றுலா தீவை" உருவாக்கும் நெடுநோக்கு வளர்ச்சி திட்டத்தை ஹெய்நான் மாநிலம் பெரிதும் நடைமுறைப்படுத்தி, குறிப்பிடத்தக்க பயன்களைப் பெற்றுள்ளது. ஹெய்னான் மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சி ஆணையத்தின் துணைத் தலைவர் சுன் யீங் அம்மையார் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது கூறியதாவது:
"2009ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள், சர்வதேச சுற்றுலாத் தீவு என்ற நெடுநோக்கு வளர்ச்சி திட்டத்துக்கு சீன அரசவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டம், ஹெய்நான் தீவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. அது தொடர்பான கட்டுமானப் போக்கில், சர்வதேச சுற்றுலாத் தீவு, சுற்றுலாச் சிறப்பு மண்டலாக மாறியுள்ளது" என்றார் அவர்.