சுற்றுலாத் துறையை மேலும் செவ்வனே வளர்க்கும் பொருட்டு, ஹைய்நான் மாநிலம், சுற்றுலாத் துறையில் ஈடுபடுவோரின் தொழில் திறன் பயிற்சியை வலுப்படுத்தியுள்ளது. 2011ஆம் ஆண்டு, சுற்றுலாத் துறை சேவையாளர்களுக்குத் தொழில் திறன் பயிற்சி வகுப்புகளை நடத்திய ஹெய்நான் மாநிலம் 11 ஆயிரத்து 500 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளித்தது.
ஹெய்நான் தீவு, தனிச்சிறப்பு வாய்ந்த தீவுக்குரிய நடையுடைபாவனைகளைச் சார்ந்து, மேலதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது. புள்ளிவிபரங்களின்படி, 2011ஆம் ஆண்டு, 3 கோடியே 10 ஆயிரம் மக்கள் ஹெய்நான் மாநிலத்தில் பயணம் மேற்கொண்டனர். இது 2010ஆம் ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 16 விழுக்காடு அதிகம். சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம், 3220 கோடி யுவானை எட்டியது. இது 2010 ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 22 விழுக்காடு அதிகம்.