ஹெய்நான் மாநிலம், சுற்றுலாத் துறையை வளர்க்கும் அதேவேளையில், உள்ளூர் உயிரின வாழ்க்கைச் சூழல் மற்றும் பாரம்பரியப் பண்பாடு மீதான பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியத்துவம் அளித்துள்ளது. ஹெய்நான் மாநிலத்தின் சான் யா நகரின் லீ இன மற்றும் மியெள இனப் பண்பாட்டு சுற்றுலா மண்டலத்தில், ரஷியாவைச் சேர்ந்த பயணி விளாடிமிர் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
"சீனா நீண்டக்கால வரலாறுடைய நாடாகும். சீனாவுக்கு வருகை தர ஆசைப்படுகிறேன். ஹெய்நான் தீவில் கழி நிலம் இருக்கிறது. வெப்பமாக இருக்கிறது. ரஷியாவில் குளிராக இருக்கிறது. ஹெய்நான் தீவின் கடற்கரைக் காட்சி மிகவும் அழகானது. காற்றும் தூய்மையானது" என்றார் அவர்.