சீன நடுவண் அரசு வெளியிட்ட பல சலுகைகள், ஹெய்நான் தீவின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய ஆதரவும் உதவியும் அளித்துள்ளன. இக்கொள்கைகளில், ஹெய்நான் தீவிலிருந்து வெளியேறும் போது வரி விலக்கு அளித்தல் கொள்கை மிகவும் பயன்மிக்கது. இது வரை, ஹெய்நான் மாநிலத்தின் ஹெய்கோ நகரிலும், சான் யா நகரிலும் வரி விலக்குக் கடைகள் நிறுவப்பட்டுள்ளன. இக்கடைகள், அதிகமான பயணிகள் ஹெய்நானுக்கு வருவதை ஈர்த்துள்ளன. சான் யா நகரில் 7 ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய ஒரு வரி விலக்குக் கடையில், நறுமண பன்னீர், அலங்காரப் பொருட்கள், கைக்கடிகாரம், தோல் பொருட்கள் உள்ளிட்ட சில பத்து தொகுதிகளைச் சேர்ந்த 20 ஆயிரம் வகைகளுக்கு அதிகமான வணிகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இப்பொருட்களின் விலை, சீனாவின் இதர பிரதேசங்களிலுள்ள கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட சுமார் 15 முதல் 35 விழுக்காடு வரை குறைந்திருக்கிறது. சான் யா வரி விலக்கு கடையின் நிரந்தரத் துணை மேலாளர் குவென் வூ செய்தியாளருக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:
"வரி விலக்குக் கடை, ஹெய்நான் தீவின் சுற்றுலாப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. 2011ஆம் ஆண்டு வெளியான புள்ளிவிபரங்களின்படி, வரி விலக்குக் கடை திறந்து வைக்கப்பட்ட பின், ஹெய்நான் தீவில் நுழைந்த பயணிகள் பொருட்களை வாங்குவதில் நபர்வாரி செலவு, 200 யுவானைத் தாண்டியது" என்றார் அவர்.
ஒருபுறம், கொள்கை ரீதியான சலுகைகள், "ஹெய்நான் சர்வதேச சுற்றுலா தீவின்" வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்துள்ளது. மறுபுறம், ஹைய்நான் மாநிலம், அதனுடைய செழிப்பான சுற்றுலா மூலவள மேம்பாட்டை முழுமையாக வெளிக்கொணர்ந்து, ஒரு தொகுதி தலைசிறந்த சுற்றுலாத் தலங்களை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையில், ஹெய்நான் மாநிலச் சுற்றுலாத் துறைப் பரப்புரை அளவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பல சர்வதேச சுற்றுலா கண்காட்சிகளில் ஹெய்நான் மாநிலத்தின் தொடர்புடைய வாரியம் கலந்து கொண்டு, சிறப்பு பரப்புரை நடவடிக்கைகளை நடத்தி வருகிறது.