இந்தக் கட்டுரை பற்றிய இரண்டு வினாக்கள்.
1, லீ இனத்தின் கைவினைப்பொருட்களில், சீன நெசவு வரலாற்றில் வாழும் புதைபடிவமாக அழைக்கப்படும் பொருள் என்ன?
2, ஹெய்நானில் பண்பாட்டில் மிகவும் பண்பாட்டுத் தனிச்சிறப்பு வாய்ந்த இரண்டு சிறுப்பான்மைத் தேசிய இனங்கள் யாவை?
சீனாவின் தென்பகுதியிலுள்ள ஹெய்நான் மாநிலம், அதன் அழகான வெப்ப மண்டலத் தீவின் இயற்கைக் காட்சிகளால் உலகில் புகழ்பெற்றது. அது மட்டுமல்ல, பல்வகை தேசிய இனப் பண்பாடுகள், ஹெய்நானின் சுற்றுலா வளர்ச்சியில் முக்கியப் பகுதியாக மாறியுள்ளன. ஹென்நான் மாநிலத்தில் ஹன், லீ, மியாவ், ஹுய் முதலிய 20க்கு மேலான இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இதில், லீ மற்றும் மியாவ் இனங்களின் பண்பாடு உள்ளூர் மிகவும் தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது. லீ இனம், ஹெய்நானின் ஆதி இனமாகும். லீ இன மக்கள், தலைமுறை தலைமுறையாக வெட்ப மண்டலக் காட்டில் வாழ்ந்து, பாரம்பரியப் பழக்கவழக்கங்களை நிலைநிறுத்தினர். இனி, செய்தியாளருடன் இணைந்து ஹெய்நான் சான்யா நகரின் கான்ஷீலிங்கில் அமைந்துள்ள லீ இன கிராமத்துக்குச் சென்று பயணம் மேற்கொள்ளுங்கள்.