• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹெய்நானின் லீ இனத்தின் கைவினைத் துணி
  2012-09-29 11:15:28  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ இன மக்கள், இயற்கைத் தாவரங்களைப் பயன்படுத்தி, சாய மூலப்பொருட்களாகக் கொண்டு நூல் நூற்கின்றனர். சாயந்தோய்த்தல் என்பது, லீ இனத்தின் நாட்டுப்புற வாழ்வில் முக்கிய அனுபவத் தொழில் நுட்பமாக இருக்கிறது. லீ இனத்தின் தனிச்சிறப்பான வரலாற்றுப் பதிவான இந்தக் கைவினைத் துணியில், லீ இனத்தின் வரலாறும், பண்பாடும் வர்ணிக்கப்பட்டன.

காலத்தின் வளர்ச்சியுடன், லீ இனத்தின் ஆதிகால வாழ்வு முறைமை, நவீன பண்பாட்டால் தாக்கத்துக்கு உள்ளானது. நகரங்களில் கைவினைத் துணியைப் பயன்படுத்தி தயாரித்த லீ இனத்தின் பாரம்பரிய ஆடை அணிந்தவர்கள் மிகவும் குறைவு. பாரம்பரிய கைவினை நெசவுத் தொழில் நுட்பத்தைத் அறிந்தவர்கள் மென்மேலும் குறைவாகினர். இதனால், கடந்த சில ஆண்டுகளில், தொடர்புடைய அரசாங்க வாரியங்கள் லீ இன கைவினைத் துணிக்கலைப் பேணிகாக்க ஏராளமான வேலை செய்து வருகின்றன. 2008ம் ஆண்டில் லீ இனத்தின் ஆடை, 2வது நாட்டு நிலை பொருட்சாரா பண்பாட்டு மரபு செல்வப் பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும், ஹெய்நான் மாநிலத்தில் லீ இன கைவினைத் துணியை புத்தாக்க முறையில் உற்பத்தி செய்த தொழில் நிறுவனங்கள் பல நிறுவப்பட்டன. இதில், லீ ஜீன் பாஃன் குறிப்பிடத்தக்கது.

லீ ஜின் பாஃன் என்னும் தொழில் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் குவோ கேய் அம்மையார், துவக்கத்தில் வேதியியல் தொழிலில் ஈடுபட்டார். பல ஆண்டுகளுக்கு முன், ஹெய்நானில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட போது லீ இனத்தின் கைவினைத் துணிப் பொருட்களைப் பார்த்து வியப்படைந்தார். பல் நூற்றாண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட இந்தத் துணிப்பொருட்கள், இன்னும் வண்ணமிகுந்தவை. அவற்றின் நெசவுத் தொழில் நுட்பம் தலைச்சிறப்பானது. 2005ம் ஆண்டு, குவோ கேய் அம்மையார் ஹெய்நானில் ஒரு தொழில் நிறுவனத்தை நிறுவி, வணிக வழிமுறை மூலம் லீ இன கைவினைத் துணிகளைப் பாதுகாக்க விரும்பினார். லீ இனக் கைவினைத் துணியின் ஆய்வு, திரட்டல், புத்தாக்கம், வளர்ச்சி முதலியவை, லீ ஜின் பாஃன் என்னும் தொழில் நிறுவனத்தின் அலுவல்களில் அடக்கப்பட்டன. இதுவரை, லீ ஜின் பாஃன், ஹெய்நானில் லீ இன கைவினைத் துணிப்பொருட்களை விற்பனை செய்த மிக பெரிய கடையாக மாறியுள்ளது. இதில் விற்பனை செய்யப்பட்டப் பொருட்களில், சுவர் கம்பளி, படுக்கை கவிரிப்புகள், செல்லிடபேசி அலங்காரப்பொருட்கள் முதலியவை இடம்பெறுகின்றன. நவீன வாழ்க்கை குறிப்புகளையும் பாரம்பரிய லீ இன கைவினைத் தொழில் நுட்பத்தையும் இணைத்து தயாரிக்கும் இந்த உற்பத்திப் பொருட்கள் பயணிகளால் வரவேற்கப்பட்டு வருகின்றன.

1 2 3 4
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040