2009ம் ஆண்டின் அக்டோபர் திங்களில், லீ இனத்தின் கைவினைத் துணி, ஐ.நா. யுனேஸ்கோவின் முதலாவது தொகுதி அவசரமாக பேணிகாக்கப்பட வேண்டிய பொருட்சாரா பண்பாட்டு மரபுச் செல்வ பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஹெய்நான் மாநிலத்தின் அரசு, லீ இன கைவினைத் துணியுடன் தொடர்பான தொழில் நுட்பத்தைப் பாதுகாக்க, பணித் திட்டத்தை உருவாக்கியுள்ளது என்று தெரிகிறது. 2013ம் ஆண்டுக்குள், வாரிசுகளைப் பயிற்றுவிப்பது, பரவல் கிராமத்தை நிறுவுவது, மூலப்பொருட்கள் உற்பத்தி தளத்தை நிறுவுவது, தொடர்புடைய பாதுகாப்பு விதிகளை உருவாக்குவது முதலியவை இதில் இடம்பெறுகின்றன.