நேயர்களே, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, லீ இனத்தின் பாரம்பரிய இசை ஒலியாகும். லீ இனத்தின் பாரம்பரியப் பண்பாட்டைக் கூறினால், 3000க்கு மேலான ஆண்டு வரலாறுடைய கைவினைத் துணி குறிப்பிடத்தக்கது. லீ இனத்தவர்கள் பண்டைக்காலத்தில் நெசவுத் தொழில் நுட்பத்தைக் கிரகித்துக்கொண்டுள்ளனர். லீ இனத்தின் கைவினைத்துணி, சீன நெசவு வரலாற்றில் வாழும் புதைபடிவமாக அழைக்கப்படுகிறது.
லீ இனக் கிராமத்தி்ல நடந்த போது, பறவைகளின் இனிமையான பாடலொளி, அழகான பூக்களின் வாசனை ஆகியவற்றை உணர்ந்து, தென்வன மரங்களிடை படகு வடிவமான வீடுகளைப் பார்க்கலாம். 80 வயதான லீ இனத்தின் பாட்டி புஃயாலன், கைவினைத்துணியைத் தயாரித்துக்கொண்டிருந்தார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது:
சுமார் 10 வயதில் கைவினைத் துணித் தயாரிப்பைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அப்போது, கிராமத்தில் இதர முன்னோர்கள் நெசவு செய்த போது, நாங்கள் பக்கத்தில் நின்று பார்த்தோம். படிப்படியாக இதை மாதிரியாகக் கொண்டு செயல்பட்டோம் என்றார் அவர்.
புஃயாலனைச் சுற்றிய தரையில் அவர் நெசவு செய்த வண்ணமான துணிகளைப் பார்க்கலாம். வண்ணமிகுந்த, கலைநயமான இந்தத் துணிகள், லீ இன பெண்களின் திறமையைச் சிறப்பாக எடுத்துக்காட்டின.
லீ இனத்தின் கைவினைத் துணியின் வரலாற்றைப் பற்றி பேசுகையில், வழிக்காட்டி சாங்லீ அறிமுகப்படுத்தியதாவது:
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன், ஹெய்நான் மாநிலத்தில் பருத்தி பயிரிடப்படத் தொடங்கியது. லீ இனக் கைவினைத் துணி, பருத்தியை மூலவளப்பொருட்களாக பயன்படுத்தி, நெசவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
நீண்டகால வரலாறு, கலைநய மிக்க தொழில் நுட்பம் ஆகியவற்றால், லீ இனத்தின் கைவினைத் துணி மக்களின் வரவேற்புப் பெறுகிறது. தரமான கைவினைத் துணித் தயாரிக்க வேண்டுமானால், நூற்பு, சாயம், நெசவு, பூத்தையல் ஆகிய நான்கு கலைமுறைகள் தேவைப்படுகின்றன.