நடு இலையுதிர்கால விழா, வசந்த விழா, டிராகன் படகு விழா, ச்சிங்மிங் விழா ஆகியவை, சீனாவின் மிகப் பெரிய பாரம்பரிய நான்கு விழாக்களாகும். சந்திர நாட்காட்டின்படி ஆகஸ்ட் 15ஆம் நாள், சீனாவில் நடு இலையுதிர்கால விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் வட்டமான தெளிந்த நிலாவைக் காணும்போது, குடும்பதினர் அனைவரும் ஒன்று கூடி வருவதை, மக்கள் எதிர்பார்க்கின்றனர். வெளியூரில் இருப்போருக்கு, இவ்விழா தாய் வீட்டையும், உறவினரின் நினைவையும் நினைக்கத் தூண்டுகிறது. எனவே நடு இலையுதிர்கால விழா, குடும்பத்தினர் ஒன்றுபடும் விழாவாக கருதப்படுகிறது.