நிலா கேக் சமைக்கும் பயிற்சித் திட்டத்தை அறிந்த மங்கோலிய பிரிவின் பணியாளர் மன்ஹெடுலாவும், அவரது மகனுடன் இத்தில் பங்கேற்கிறார். நடு இலையுதிர்கால விழா, மங்கோலியாவிலுள்ள குடும்பத்தினரை நினைத்து அவரை ஏங்கச் செய்கிறது. தில்ஷானின் மனைவி அவரது மகனுடன் சேர்ந்து அண்மையில் சீனாவுக்கு வந்துள்ளனர். அவர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.
கேக் மாவு, எண்ணய், சர்க்கரை பாகு, முட்டையின் மஞ்சள் கரு, சோடா நீர், ஆகியவற்றை முறையாகக் கலந்து நிரப்புதல் மூலம், நிலா கேக் சமைக்கப்படுகிறது. இதற்குத் தேவையான எல்லா பொருட்களையும் பேரங்காடியில் வாங்கலாம். பத்து நிலா கேக் சமைக்கிறோம். சர்க்கரை பாகுவுக்குப் பதிலாக, தேனைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அந்த நிலா கேக்கின் வண்ணம் அழகாக இருக்காது. சோடா நீர், நிலா கேக்கை மேலும் மென்மையாக மாற்றுகிறது. பெரும்பாலான மூலப்பொருட்களை மாவில் சேர்த்த பிறகு, அதை நன்றாகப் பிசைய வேண்டும். அடுத்து 74 கிராம் எண்ணெய்யை அதில் சேர்த்து பிசைய வேண்டும். நன்றாகப் பிசைந்து உருண்டையாக உருட்டி எடுத்து, 10 நிமிட ஊற வைக்க வேண்டும். பின்னர் நிலா கேக் செய்யத் தொடங்கலாம்.
ஒரு நிலா கேக்கிற்கு, 30 கிராம் கேக் மாவு கலந்த மேற்பகுதியும் 70 கிராம் உள்ளே வைத்து, நிரப்புவதற்கான மக்காச்சோளமும் தேவைப்படும். அடுத்து கேக் மாவு கலவையை வட்டமாகச் சப்பாத்தி உருட்டுவதைப் போல விரிவாக்கி, அதன் நடுவில் பசை மாவை வைத்து, செவ்வனே மூடிவிட வேண்டும். நிலா கேக் அச்சைச் சுற்றி எண்ணெய் தடவி, அதில் உருண்டையை அழுத்தி வைக்க வேண்டும். பின்னர் அந்த அச்சிலிருந்து பிரித்து எடுத்து தனியாக தட்டில் வைக்க வேண்டும்.