சீனாவின் யுன்னான் மாநிலத்தின் பூ அர் நகரம், மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. பூ அர் நகரில், 26 தேசிய இன மக்கள் வாழ்கின்றனர். ஒவ்வொரு இனத்துக்கும் தேயிலை தேவன் உண்டு.
பூ அர் நகரைச் சேர்ந்த பு லாங் இனத்தவர் அடர்த்தியான காடுகளில் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள், இவ்வினத்தவர் தேயிலை தேவனை வணங்குகின்றனர். அவர்களின் தேயிலை தேவன், ஓர் உயர்ந்த தேயிலை மரமாகும். இம்மரத்தில், செழிப்பான இலைகள் இருக்கின்றன. இம்மரம் ஆயிரத்துக்கு அதிகமான ஆண்டுகளாக அங்கே வளர்ந்து நிற்கின்றது.
3 கோடியே 54 இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய தழை மலர் புதை படிவம், பூ அர் நகரின் ஜிங் கு வடிநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதை படிவத்துக்கு அருகில் உள்ள கண்கொள்ளாத அழகு மிகுந்த காடுகளில், சுமார் 90 ஆயிரம் ஹெக்டர் நிலப்புரப்புடைய பழமைவாய்ந்த தேயிலைச் செடிகள் வளர்கின்றன. தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, நீண்டக்கால ஆய்வுகள் மூலம், சுறுச்சுறுப்பான விவேகமான பூ அர் மக்கள், இரண்டு வகை பழமை வாய்ந்த தேயிலைச் செடிகளை வளர்த்தனர். இருந்த போதிலும், பூ அர் தேயிலை மீதான உலக மக்களின் அதிகமான தேவைகளை இது நிறைவு செய்ய முடியவில்லை என்று வா இனத்தைச் சேர்ந்த தேயிலை பறிக்கும் நங்கையர் லீ வெய் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"தற்போது தேயிலை செடி ஒன்றிலிருந்து 2 முதல் 3 கிலோகிராம் எடையுள்ள தேயிலையைப் பறிக்கலாம். சுமார் 0.4 ஹெக்டர் நிலப்பரப்புடைய தேயிலைத் தோட்டத்திலிருந்து சுமார் 50 கிலோகிராம் தேயிலையைப் பறிக்கலாம். முந்தைய விளைச்சலை விட இது அதிகரித்துள்ளது" என்றார் அவர்.
பூ அர் தேயிலை மீதான மேலதிக தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு, மட்டு நில வகை தேயிலைச் செடிகளைப் பயிரிடுவதற்கு பூ அர் நகர அரசு வழிகாட்டி, ஊக்கமளித்துள்ளது. தேயிலைச் செடிகளைப் பயிரிடும் நவீன தொழில் நுட்பத்தை அரசு பூ அர் பிரதேசத்தில் விரைவாக பரவல் செய்துள்ளது. ஆனால் உயர் விளைச்சல் தரும் இந்த நவீன தேயிலை பண்ணைகளில் பயிரிடும் தேயிலை செடிகளின் ஆயுள் மிகவும் குறைந்தது. தேயிலை செடி வகைகள் புதியவை. இத்தேயிலை மரங்களின் தேயிலை தரம், பழமைவாய்ந்த தேயிலை மரங்களின் தரத்தை விட தாழ்வாகவே இருக்கிறது.