பூ அர் தேயிலை தரத்தை உத்தரவாதம் செய்யும் பொருட்டு, பூ அர் நகர அரசு, பூ அர் வேளாண், பூ அர் பண்பாடு, பூ அர் அறிவியல், பூ அர் மானிடப் பண்பாடு ஆகிய நெடுநோக்கு திட்டங்களை முன்வைத்தது. பூ அர் நகரின் தேயிலை பணியகத்தின் துணைத் தலைவர் லியு லோங் கூறியதாவது:
"பூ அர் வேளாண், பூ அர் பண்பாடு, பூ அர் அறிவியல், பூ அர் மானிடப் பண்பாடு ஆகியவை 4 காலக்கட்டத்தில் தேயிலை தொழிலின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளன. 2008ஆம் ஆண்டு பூ அர் அறிவியல் திட்ட முதல் ஆண்டாகும். பூ அர் தேயிலை தொழிலின் பூ அர் அறிவியல் ரீதியான வளர்ச்சியை விரைவுபடுத்த, பூ அர் தேயிலை ஆய்வகமும், தேசிய பூ அர் தேயிலை கண்காணிப்பு மற்றும் பரிசோதனை மையமும் நிறுவப்பட்டன. இது பூ அர் தேயிலை தரத்தை புள்ளிவிபரங்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும்" என்றார் அவர்.