2010ஆம் ஆண்டு முதல், உயிரின தேயிலை பண்ணைகள், பசுமையான பண்ணைகள், கரிம தேயிலை பண்ணைகள் ஆகிய தளங்களின் கட்டுமானத்தைத் தூண்டுதல், தேயிலை செடி வகைகளை மேம்படுத்துதல், பல்வகைத்தன்மை வாய்ந்த உயிரின தேயிலை பண்ணைகளை நிறுவுதல், தேயிலை பண்ணைகள் மற்றும் வேளாண் உற்பத்தி சாதனச் சந்தைகளின் நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்தல், வரையறைக்கு புறம்பான பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் வேதியல் உரத்தின் பயன்பாட்டைத் தடுத்தல் ஆகிய நடவடிக்கைகளை பூ அர் நகர அரசு மேற்கொண்டுள்ளது.
2011ஆம் ஆண்டு இறுதி வரை, பூ அர் நகரில் 66 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்புடைய உயிரின தேயிலை பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 199 வேளாண் உற்பத்தி சாதனச் சந்தைகளின் அலுவல் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, யுன்னான் மாநிலத்தில் மிக பெரிய தேயிலை செடிப் பயிரிடுதல் நிலப்பரப்பு, மிக அதிகமான தேயிலை தொழில் நிறுவனங்கள் மற்றும் தேயிலை உற்பத்தி அளவு, மிக செழிப்பான தேயிலைப் பண்பாடு, மிக வலுவான தேயிலை அறிவியல் ஆய்வு ஆற்றல், மிக தலைசிறந்த முதலீட்டுச் சூழல் ஆகியவை கொண்டுள்ள பிரதேசமாக பூ அர் நகரம் மாறியுள்ளது. தேயிலை, பூ அர் நகரின் ஆதாரத்தூண் தொழிலாகவும், இங்குள்ள பல்வேறு தேசிய இனத்தவர் செல்வமடையும் கருவியாகவும் மாறியுள்ளது என்று நங்கையர் லீ வெய் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"முன்பு எனது குடும்பத்தினர் காய்கறிகளைப் பயிரிட்டு, அதனை வைத்து நாங்களே சாப்பிட்டோம். என் குடும்பத்தின் வருமானம் மிகவும் குறைவாக இருந்தது. என் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்தை வழங்குவதில் இன்னல்கள் நிலவின. பிறகு எனது குடும்பத்தினர் தேயிலைச் செடிகளைப் பயிரிடத் துவங்கினர். தேயிலையை விற்பனை செய்வதன் மூலம், அதிக பணம் சம்பாதித்துள்ளோம். இத்தகைய வாழ்க்கை மேலும் அருமையாகியுள்ளது" என்றார் அவர்.