• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பூ அர் நகரில் தேயிலை தொழிலின் வளர்ச்சி
  2013-02-22 17:15:56  cri எழுத்தின் அளவு:  A A A   

உயிரின பூ அர் தேயிலை நுகர்வோரால் படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. Ku Cong Shan Zhai தேயிலை கூட்டு நிறுவனத்தின் விற்பனையாளர் Cai Xiao கூறியதாவது:

"தற்போதைய மக்கள் உயர் தரமான வாழ்க்கை நடத்த விரும்புகின்றனர். பழமையான தேயிலை செடி மற்றும் உயிரின தேயிலை செடிகளைப் பயிரிடும் போக்கில், பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கும், வேதியல் உரத்திற்கும் இடவில்லை. இவ்விரு தேயிலை வகைகளி்ன் தரம் மேலும் சிறந்ததாக இருக்கிறது. இவற்றிற்கான தேவைகள் அதிகம்" என்றார் அவர்.

தேயிலை செடிகளைப் பயிரிடும் விவசாயிகள், தேயிலை வணிகர்கள், நுகர்வோர், அரசு ஆகிய பல தரப்புகளும் கூட்டாக வெற்றி பெறும் மாதிரி பூ அர் நகரில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. தேயிலை, பூ அர் மக்களுக்கு பெருமை தந்துள்ளது. பூ அர் நகரவாசி Wu Chang Jiang கூறியதாவது:

"மிகவும் பெருமையடைகிறோம். கடந்த சில ஆண்டுகளில், உலகளவில் பூ அர் தேயிலை தரம் மேலதிக மக்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பூ அர் பிரதேசத்தின் பொருளாதாரம், பண்பாடு ஆகியவை பெருமளவில் வளர்ச்சியடைந்து வந்துள்ளன" என்றார் அவர்.

தற்போது, பூ அர் நகரில் தேயிலை பண்ணைகளின் மொத்த நிலப்பரப்பு, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டரை எட்டியுள்ளது. பண்டைய காலத்திலிருந்து இன்று வரையாக வளர்ந்துள்ள தேயிலை செடிகளிடையில் உயிரின வாழ்க்கை சங்கிலி உருவாகியுள்ளது. வெவ்வேறான வகைகளைச் சேர்ந்த உலக தேயிலை செடிகள் இங்கே காணப்படுவதே பூ அர், தேயிலையின் ஊற்று மூலமாகும். இது உலக தேயிலையின் உற்பத்தி மையமாகவும் மாறியுள்ளது.

1 2 3 4 5 6 7 8
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040