• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சாமா குதாவ் என்ற பழங்கால தேயிலை குதிரை பாதை
  2013-03-14 19:59:36  cri எழுத்தின் அளவு:  A A A   

இருந்த போதிலும், இது தேயிலை வியாப்பாளிகளின் குடும்பத்தினரின் கவலையை நீக்க முடியவில்லை. அவர்கள் புறப்பட்டதற்கு முன், அவர்களது குடும்பங்களின் முதியோரும், மகளிரும், அவர்களது பாதுகாப்புக்காக இறை வேண்டல் செய்யுமாறு கிராமத்தில் செல்வாக்கு மிகுந்த பொதுக்குடி மரபுக்குழுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தனர். தேயிலை வியாப்பாளிகள், சின் ஷா சியாங் ஆறு, லன் ச்சாங் சியாங் ஆறு, நூ சியாங் ஆறு ஆகிய ஆறுகளின் ஊற்று மூலப் பிரதேசத்தைக் கடந்த போது, மிக ஆபத்தான நிலைமையில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் சிலர் மலை அல்லது ஆற்றை கடந்த போது உயிரிழந்தனர். முற்காலத்தில் இப்பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரின் மனைவி Wai Xian Kan பு லாங் இனத்தைச் சேர்ந்தவர். அவர் கூறியதாவது:

"என் தாத்தா, தந்தை மற்றும் கணவன், தேயிலை குதிரை வர்த்தக அணி உறுப்பினர்களாக, தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறிய பின், நாட்தோறும் அவர்களுக்காக இறைவேண்டல் செய்தேன். அவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று விரும்பினேன்" என்றார் அவர்.

1 2 3 4 5 6 7
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040