மெய் லீ பனி மலை, திபெத்தின் எட்டு புனித மலைகளில் ஒன்றாகும். இம்மலையின் உச்சி உருகாத பனியால் மூடப்பட்டிருக்கிறது. 2 ஆயிரம் மீட்டர் நீளமுடைய பனிக்கட்டி உருவாகியுள்ளது. அதுதான் தேயிலை வர்த்தக அணி உறுப்பினர்கள் கடக்க வேண்டிய இடமாகும். அவர்கள் பக்தி சிந்தனையுடன் அதைக் கடந்தனர்.
பாதை வெகு நீளமாக இருந்ததால், பச்சை உணவுப் பொருட்களும் நீரும் இருப்பதை உத்தரவாதம் செய்யும் பொருட்டு, வர்த்தக அணி உறுப்பினர்கள் இப்பாதையின் நெடுகிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் எளிதான வியாபாரம் நடத்தினர். உள்ளூர் கிராமவாசிகள் யாக் எருது வெண்ணெய் கொண்டு, வியாப்பாளிகளிடமிருந்து தானியம், உப்பு ஆகியவற்றை பரிமாறிக் கொண்டனர். சில மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் லாசா அடைந்தனர். அவர்கள் லாசாவில் சரக்குகளை ஏற்றியிறக்கிய பின், குறுகிய நேரம் ஓய்வு பெற்றனர்.
தேயிலை லாசாவில் விற்கப்பட்டு, திபெத்தின் பல்வேறு இடங்களுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு, விற்கப்பட்டது. பண்டைக்காலத்தில், திபெத்தில் நாடோடி ஆயர்கள் லாசாவுக்கு வந்து தேயிலை வாங்கினர். லாசா, சாமா குதாவின் இறுதி நிறுத்தமாகும். இதற்கிடையில், லாசா, சாமா குதாவின் இன்னொரு துவக்கப் புள்ளியாகும். யாக் எருதுகள், தேயிலையை தோளில் சுமந்து கொண்டு, இமய மலையைக் கடந்து சென்றன. சாமா குதாவ், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் விரிந்தது.
தற்காலத்தில், செங்குத்தான பாறைகளுக்கிடை சிறு பாதை, பெரிய பாதையாக விரிவாக்கப்படுவதுடன், குதிரைகளுக்குப் பதிலாக, வாகனங்கள் இப்பாதையில் ஓடுகின்றன. நாள்தோறும், காலையில், சிங் மெய் மலையின் பழமை வாய்ந்த தேயிலை பண்ணையில், பெண்கள் சுறுசுறுப்பாக தேயிலையைப் பறிக்கின்றனர். அவர்கள் பறித்த தேயிலைகள், வெவ்வேறான தரம் மற்றும் வகைக்கிணங்க, பிரிக்கப்படுகின்றன. நுகர்வோருக்குப் பல தெரிவுகள் உண்டு. இரவு வரும் வேளையில், சிங் மெய் மலையில், சாமா குதாவ் வழியாக வியாபாரத்தில் ஈடுட்ட வணிகர்கள் உறங்கியிருந்தனர். அவர்களின் கனவில், ஒரு காதல் பாடல் பாடப்படுகின்றது.
நேயர்களே, "சாமா குதாவ் என்ற பழங்கால தேயிலை குதிரை பாதை" பற்றிக் கேட்டீர்கள். இத்துடன், இன்றைய "அழகான யுன்னான் மாநிலம்" சிறப்பு நிகழ்ச்சி நிறைவுறுகிறது.