ஒலி 1 .................
யூநான் மாநிலத்தின் தலைநகர் kunming, தென் மேற்கு சீனாவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் குளிர்காலத்தில், எண்ணற்ற கடல்புறாக்கள், கிழக்கு சைபீரியாவிலிருந்து, இந்நகருக்கு வந்து குளிர்காலத்தை கழிக்கின்றன. இந்நகரிலுள்ள ஆறு மற்றும் ஏரியின் அருகில் அவை காணப்பட்டு உள்ளன. கடல்புறாக்கள், உணவுப் பொருட்களைத் தேடி, நடந்து, இனைப்பாறி, மக்களுடன் இணைந்து விளையாடுகின்றன. இன்றைய நிகழ்ச்சியில், kunming நகரிலுள்ள கடல்புறாக்களுடைய நண்பரான liuzhen பற்றிய கதையை, உங்களுடன் இணைந்து பகிர்ந்துகொள்கின்றோம்.
74 வயதான liuzhen, பலவீன முதியவர். ஆனால், கடல்புறாக்களைப் பற்றி பேசும் போது, உற்சாகத்தோடு விளக்கிகூறுகின்றார். அவர் செய்தியாளரிடம் கூறியதாவது
செய்தியாளருடன் இருப்பது
1985ஆம் ஆண்டு முதல், கடல்புறாக்கள் இந்நகரில் காணப்படுகின்றன. இந்நகரின் nantaiqiao, panlongjiang, cuihu முதலிய பிரதேசங்களில் அவை குவிந்து காணப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
தொழிற்சாலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, kunming நகரின் கடல்புறா பாதுகாப்புச் சங்கத்தின் கண்காணிப்பாளர்களில் ஒருவராக Liuzhen இருந்து வருகின்றார். கடந்த 20 ஆண்டுகளாக, cuihu பிரதேசத்தில் கடல்புறாகளைக் கண்காணித்து வருகின்றார். கடல்புறாகளை Liuzhen கண்டு மிகவும் விரும்புகின்றார். இக்கடல்புறாக்கள், நகரில் குளிர்காலத்தைக் கழிக்க வசதி செய்து, சீராகப் பாதுகாக்க அவர் உறுதி பூண்டிருக்கின்றார். இப்பணி ஆற்றுவதன் கலந்துகொள்வதன் மூலம், அதிகமான மக்கள் Liuzhen பற்றி அறிந்துகொள்கின்றனர். நேரம் இருந்தால், மக்கள் இங்கு கடல்புறாகளைக் காண வரும் போது, அவருடன் பேசி உரையாட விரும்புகின்றனர்.
1985ஆம் ஆண்டு, Liuzhen தொழிற்சாலையில் வேலை செய்தார். ஓய்வு நேரத்தில், அவர் கடல்புறாக்கள் குவிந்த பிரதேசத்திற்குச் சென்று, கடல்புறாகளுக்கு தீனியை ஏற்பாடு செய்து, கடல்புறாகளை பிடித்துச்செல்ல திட்டமிட்ட மக்களுக்கு அறிவுரை கூற முயற்சி செய்தார்.