Liuzhenகின் வீட்டில், கடல்புறாக்கள் பற்றிய குறிப்புகள் அதிகம். கடந்த 20 ஆண்டுகளாக, ஆண்டுதோறும், ஒவ்வொரு குறிப்பிலும், கடல்புறாக்கள் பற்றிய விரிவான தகவல்கள் இதில் காணப்படுகின்றன. கடல்புறாகளின் வாழ்க்கை முறை, இந்நகரில் வந்து போகும் நேரம், இடம், இக்கடல்புறாக்களுக்கு உணவு கொடுக்கும் மக்களின் எண்ணிக்கை, காயம் ஏற்படுவது போன்ற தகவல்கள், இக்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
கடற்பறவை பற்றிய பதிவேடு
2011ஆம் ஆண்டின் டிசம்பர் 16ம் நாள், மேகமூட்டம். காரணமாக பிற்பகல், அன்று cuihu ஏரியின் தென் மற்றும் கிழக்கு நீர்பரப்பில் 43 கடல்புறாக்கள் இறந்தன. இதற்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. இது, வரலாற்றில், மிக அதிகமான கடல்புறாக்கள் இறந்த எண்ணிக்கை பற்றிய தகவல், அவரது குறிப்பில் காணப்படுகின்றது.
இத்தகைய தகவல்கள், இந்நகரின் கடல்புறா பாதுகாப்புச் சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் உணர்வுப்பூர்வமாக விளக்கிக்கூறினார். நாள்தோறும், எண்ணற்ற கடல்புறாக்கள், cuihu ஏரியில் ஒன்று குவிந்து வருகின்றன. கடல்புறாகளின் எண்ணிக்கையை கணக்கெடுவது கடினம். ஆனால், Liuzhen தனது சொந்த முயற்சியின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்கின்றார். அவர் விளக்கிக்கூறியதாவது
நாங்கள் அறிவியல் பூர்வான, முறைமையான வழிமுறையின் மூலம் கடல்புறாகளைக் கணகிடுகின்றோம் என்று அவர் தெரிவித்தார்.