"சுவாசரியமானது என நானும் உணர்கின்றேன். குழந்தை மட்டுமல்லாமல், நானும் அறிவார்ந்த மகிழ்ச்சியை அடைகின்றேன்" என்று ஃபான்ஜிங்ஜிங்கின் தாய் கூறினார்.
பெரிய கை சிறு கையைப் பிடிப்பதென்ற அறிவியல் பரப்புரை நடவடிக்கையில் அவர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்தத் தாவரத் தோட்டத்தின் சுற்றுலாப் பிரிவுத் தலைவர் ச்சூஹோங்சியாங் இது பற்றி கூறியதாவது—
"அவ்வப்போது நடைபெறும் இந்த நடவடிக்கை சுமார் 10 நாட்கள் தொடரும். இரவில் சுற்றுலாப் பயணிகள் தோட்டத்தில் தங்கி, தாவரங்களின் நறுமணத்தில் உறங்குகின்றனர். சீன அறிவியல் கழகத்தின் கீழ் இயங்கும் தாவரத் தோட்டம் என்ற முறையில், இத்தோட்டத்தில் நிபுணர்கள் குழு இருக்கிறது. 10க்கு மேற்பட்ட வெளிநாட்டு நிபுணர்களும் உள்ளனர். சில சமயம் அவர்கள் பெரிய கை சிறு கையைப் பிடிப்பதென்ற நடவடிக்கையில் கலந்து கொள்கின்றனர். அறிவியலுடன் இணைந்த சுற்றுலா, சிறந்த பயன் தந்து வருகிறது" என்று அவர் கூறினார்.
இன்றைய நிகழ்ச்சியின் கடைசியில், காட்டு யானை பள்ளத்தாக்கைப் பார்வையிடுவோம்.
காட்டு யானை பள்ளத்தாக்கு, மெங்யாங் இயற்கை புகலிடத்திலுள்ள சான்ட்சா ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது, ஆசிய யானைகள் மிக அதிகமாகக் காணப்படும் பகுதியாகும். வசதியான போக்குவரத்து மற்றும் தனிச்சிறப்புமிக்க வெப்ப மண்டலக் காடுகளின் காட்சிகளால், சிஷுவாங்பான்னாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் பகுதியாக இது மாறியுள்ளது. சீனாவின் முதலாவது ஆசிய யானை அருங்காட்சியகம், காட்டு யானை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட பின், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடையில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜியாங்சூ மாநிலத்திலிருந்து வந்த சுற்றுலாப் பயணி செல்வி லூவ் கூறியதாவது—
"காட்டு யானையைக் காணவில்லை. கால் தடம் மட்டுமே கண்டேன். யானை பாதுகாப்பில் நமது நாடு மேற்கொண்ட பணிகள் முழுமையானவை. சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தி, யானை வாழும் சூழ்நிலையைப் பாதுகாக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.