700 சதுர மீட்டர் பரப்பளவுடைய ஆசிய யானை அருங்காட்சியகத்தில், பூமியிலுள்ள யானை, சீனாவிலுள்ள ஆசிய யானை, யானையின் தோற்றமும் கட்டமைப்பும் உள்ளிட்ட 9 அம்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளில், சர்வதேச சுற்றுலா வட்டத்தையும், சுற்றுச்சூழல் நேய சுற்றுலாத் தலத்தையும் உருவாக்க சிஷுவாங்பான்னா பாடுபட்டு வருகிறது. அதிலுள்ள பார்வையிடுதலுக்கான சுற்றுலாத் தளமாக தற்போது விளங்கும் இந்த இடம், விடுமுறைக்கான சுற்றுலாத் தளமாக மாறுவதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகிறது என்று சிஷுவாங்பான்னா சோவின் துணைத் தலைவர் அறிமுகம் செய்தார். மேலும், 2012ஆம் ஆண்டு ஜுன் திங்கள் உருவாக்கிய ஒத்துழைப்பு உடன்படிக்கையின்படி, சிஷுவாங்பான்னா சோவும் யுன்னான் மாநிலத்தின் சுற்றுலா பணியகமும், சிஷுவாங்பான்னாவை உள்நாட்டில் முதல் தரமான, உலகில் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் நேய சர்வதேச சுற்றுலா சோவாகக் கட்டியமைத்து, சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும்.