• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கா விஸ்காங்சின் ஆல்பர்ட்
  2013-01-28 11:10:48  cri எழுத்தின் அளவு:  A A A   
அன்பினியீர், வணக்கம். சீனாவில் இன்பப் பயணம்:வடகிழக்கு சீனாவின் லாஃபா மலை குறித்து ஈஸ்வரி, ஓவியா எழில் மிக்க செங்குத்து மலையின் சிறப்பு குறித்து சுவையான செய்தி வழங்கினார்கள். ஜீலிங் மாநிலத்தில் உள்ள லாஃபா மலை ஓவியம் போன்றது. சுற்றுப்புறங்கள் வசந்த காலத்தில் பச்சைப்பசேலென்ற‌ எழில் காட்சிகளை இவர்கள் வர்ணித்தது அப்படியே அந்த மலைப்பக்கம் என்னைக் கொண்டு சென்றது. வண்னப் பூக்கள், குளிர் காலத்தில் பனி மூடிய‌ காட்சிகள் என்று நடுக்கும் தகவல்களைச் சொல்லி துணி இல்லாதவர்கள் தூரத்தில் நின்று பார்த்து வரவேண்டியதுதானா? என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ஜீலிங் எனது ஊர் என்ற உற்சாகப் பாடல் நன்றாக இருந்தது. 880 மீ.உயரம். 1995 தேசிய வனப் பூங்காவான தகவலும் அறிந்தேன். அற்புதமான கருங்கற்கள், கரடி போலவும் தேவதாரு மரம் போலவும் மலை முகடுகள் காட்சியளிக்கிறது, என்று கூறியது அந்த உருவங்களை என் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியது. 81மலை முகடுகள், 72 குகைகள், துல்லியமான புள்ளி விபரம் இல்லையென்றாலும் அதிக அளவில் குகைகள் உள்ளதாகவும், இரண்டாவது முகட்டில் அமைந்து உள்ள ஷென் ஷிங் குகை 3 வாயில்களைக் கொண்டது. 1000 பேர் தங்கலாம் என்று சொன்னது என் விழிகளை வியப்பில் விரித்தது. பல க‌தைகள் உலவுவதாகவும் ஆனால் உண்மையல்ல என்றும் தெரிவித்தனர். 96 சதுரலட்சம் பரப்பளவில் 23 மாநிலங்கள் 5 தன்னாட்சிப் பிரதேசங்கள், 4மாநகராட்சிகள் 2 சிறப்பு நிர்வாக பிரதேசங்கள் என்று ஒவ்வொன்றும் சிறப்புத் தன்மை கொண்டது. என்று 130 கோடி சீனர்கள் வரவேற்பதாக வரவேற்புரைத்தனர். ஜீலிங் நகர மரங்களின் கிளைகளில் உறைபனி இருப்பது அழகு என்றும் சுற்றுலா குளிர்கால சர்வதேச நிலைப் பனிச்சறுக்கு விளையாடவும், கம்பிவட ஊர்தி மூலம் காலை எட்டுமணி முதல் மாலை 4:30 மணிவரை பயணித்து இயற்கை அழகை இரசிக்க முடியும் என்று தெரிவித்து ஜீலிங் உறைபனியைப் பார்க்க எனக்குள் சுற்றுலா ஆசையை கிளர்ந்தெழச் செய்தது. நாற்சந்தியில் 70 வகை இயற்கை மூலிகைகள் மற்றும் கைவினைச்சிற்பங்கள் தெரிவு செய்யவும் எழில் மிக்க சீனாவை அறிமுகப்படுத்திய ஈஸ்வரி மற்றும் ஓவியா அவர்களுக்கும் என் கரம் குவித்த இனிய நன்றிகள்! நன்றி. ஆல்பர்ட், அமெரிக்கா.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040