வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
2013-01-28 12:43:03 cri எழுத்தின் அளவு: A A A
அன்புடையீர், வணக்கம்.
ஜனவரித் திங்கள் 16-ஆம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் கேட்டேன். இன்றைய சிறப்பு நட்புப்பாலம் நிகழ்ச்சி என்னைப் பெரிதும் கவர்ந்தது. இந்தியன் கிச்சன் உணவகத்தில், கடந்த 13-ஆம் நாள் இடம்பெற்ற பொங்கல் திருநாள் தொடர்பான சிறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழர்களை நேரில் சந்தித்து, சிறப்பான முறையில் நேர்காணல் நிகழ்ச்சியைத் தயாரித்த நண்பர் கலைமணிக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட ஜோசப், கோவிந்தன், அரவிந்தன், புஷ்பநாத், தி.கலையரசி, கலைமகள், இலக்குமணன் ஆகியோர் அனைவரும் நன்றாகப் பேசினர். குறிப்பாக, புஷ்பநாத் அவர்களின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள் மிகவும் சிறப்பானவை. கடந்த 2001-ஆம் ஆண்டு முதல், ஷாங்காய், பாங்காக் மற்றும் பெய்ஜிங் என மாறி மாறி அவர் செய்து வரும் பணி மிகவும் சுவையானது. இன்றைய நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
விருந்தினர்களை, சீன வானொலிக்கு வரவழைத்து பதிவு செய்யப்படும் நிகழ்ச்சியை விட, நேரடியாக விருந்தினர்களை அவர்களின் இடத்திலோ அல்லது விழாவிலோ சந்தித்து நேரடியாக (Live) இதுபோல் நிகழ்ச்சியைத் தயார் செய்வது மிகவும் சிறப்பான வழிமுறையாகும். தம் முதலாவது நிகழ்ச்சியிலேயே, நண்பர் கலைமணி அவர்கள் சாதித்து விட்டார். தொடர்ந்து இதுபோன்ற வழிமுறையில் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
அன்புடன்,
எஸ்.செல்வம்,
வளவனூர் புதுப்பாளையம்,
நேயர் எண். 056837.

உங்கள் கருத்தை பதிவு செய்ய