ஓ-நான் ஓவியா. வணக்கம்.
ஈ-இன்றைய நிகழ்ச்சியில வடகிழக்கு சீனாவின் ச்சிலின் மாநிலத்தின் லாஃபா மலை பற்றி கூறுகின்றோம். மலையில், செங்குத்தான சாலைகளும் அரிய வடிவிலான குகைகளும் காணப்படலாம். மேலும் செங்குத்தான முகடு, காட்சிகள் மேலும் அழகானது.
ஓ- சுற்றுலா, சீன மக்கள் விடுமுறையைக் கழிக்கின்ற நல்ல தெரிவாக மாறியுள்ளது. இப்போது ஜிலின் மாநிலத்தின் புகழ்பெற்ற லாஃபா மலைக்குச் சென்று இம்மலையின் அழகை அறிவோம்.
பாடல்- ஜிலின் எனது ஊர்
ஈ-இப்போது நீங்கள் கேட்டு கொண்டிருக்கின்ற பாடல், ஜிலின் எனது ஊர் என்ற பாடலாகும். அந்த இசை சீன வடகிழக்கு பிரதேசத்தின் சிறப்பான பாணியில் உள்ளது.
ஓ-ஆமாம். மிகவும் உற்சாகமான ஒரு பாடலாகும். பாடலில் பாடப்பட்ட வரிகளைப் போல, ச்சிலின் மாநிலத்தில் ச்சாங்பெய்ஷென் மலை உள்ளிட்ட பல மலைகள் அமைந்துள்ளன. ஏன் நாங்கள் இன்று லாஃபா மலையை அறிமுகப்படுத்துகிறோம்?ஏன் அது லாஃபா ஷென் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது?என்று பார்ப்போம்.
ஈ-லாஃபா மலை, கற் குகை, அரிய வடிவ கற்கள் முதலியவற்றால் புகழ் பெற்றது. அது லாஃபா கிராமத்தில் அமைந்துள்ளதால், லாஃபா மலையென அழைக்கப்படுகிறது. அதன் உயரம் 880 மீட்டர் மட்டுமே. ஆனால், மிக செங்குத்தான ஒரு மலையாகும். மலையில் கருங்கற்கள் மிக அதிகம். கற்கள் காலப்போக்கில் இணைந்து பல மலை முகடுகளையும் குகைகளையும் உருவாக்கின. 1995ம் ஆண்டு தேசிய நிலை வானப் பூங்காவாக வகுக்கப்பட்டு ச்சிலின் மாநிலத்தின் வரவேற்கப்பட்ட சுற்றுலா இடமாக உள்ளது.
ஓ-அப்படியானால், அங்குள்ள காட்சிகள் மிகவும் அழகாவை அல்லவா. அதன் தனிச்சிறப்புகளை விரிவாக விளக்கி கூறலாமா?
ஈ-சரி. முதலில், அழகான காட்சி. இரண்டு, அற்புதக் காட்சி தரும் கற்கள். மூன்று, செங்குத்தான மலை என்ற வரிசையில் விளக்கலாம். முதலாவதாக, லாஃபா மலையின் அழகான காட்சியைக் கூறுகிறோம்., பார்ப்பதற்கு ஓவியத்தை போன்ற இயற்கைக் காட்சியை அங்கு கண்டுரசிக்கலாம். அதன் சுற்றுப்புறங்களில் மனிதர் கட்டுமானங்கள் மிக குறைவு. வசந்த காலத்தில் பச்சை பசேலென விறுவிறுப்பாக வளர்கின்ற மரங்களும் புல்கள் உற்சாகம் ஊட்டுகின்றன. மே திங்களில் வண்ணமய மலர்கள் பல பூக்கின்றன. இலையுதிர்காலத்தில், சிவப்பு மற்றும் பசுமை மர இலைகள் அழகாக காட்சியளிக்கின்றன. குளிர்காலத்திலும் பனியால் மூடிய லாஃபா மலை சிறப்பான காட்சியளிக்கிறது.
ஓ-எனவே, ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா மேறஅகொள்ளலாம். இரண்டாவது, அற்புத காட்சியளிக்கும் கற்களை எப்படி விளக்கி சொல்வது?
ஈ-விளங்குகள் மரங்கள் முதலிய வடிவங்களில் இங்குள்ள மலை முகடுகள் காட்சியளிக்கின்றன. சில மலைமுகடு, கறுப்பு கரடியைப் போலுள்ளன. சில கற்கள் தேவதாரு மரத்தைப் போன்றவை. இவை தான், கற்களின் அற்புதமான காட்சிகளாகும்.
ஓ-சரி, சரி, மூன்றாவதாக, சொங்குத்தான மலை என்பதை எளிதாக புரிந்துக் கொள்ளலாம். செங்குத்தானது என்றால், அதில் ஏறிச் செல்வது மிக கடினமானதாக இருக்கும்.
ஈ-ஆமாம். மிக ஒடுங்கிய பாதை ஒரு அடி மட்டுமே. ஆபத்தானது. பலர் இங்கு வந்து மலையில் ஏற பயப்படுகின்றனர்.
ஓ-அப்படியா, துணிவில்லாதவர்கள். லாஃபா மலைக்குப் போனால், தொலைவில் நின்று பார்த்துவிட்டு வரவேண்டியது தானா!
ஈ-அது போன்ற பயணிகளுக்காக, லாஃபா மலை சுற்றுலா வாரியம், ஒப்பீட்டளவில் சமமட்ட மலைச்சாலைகளை கட்டியமைத்தனர். மலையின் தெற்குச் சரிவில், இச்சாலைகள் முக்கிய காட்சி தளங்களை இணைக்கின்றன. இந்த நெறியில் சுற்றுலா மேற்கொள்வது துணிவில்லாதோருக்கு உகந்ததாகும்.
ஓ-இந்நெறியில் என்னென்ன காட்சித் தளங்கள் அமைந்துள்ளன?
ஈ-முதலில் தனிச்சிறப்புடைய மலைக் குகைகளில் நுழைந்து உள்ளே சிறப்பான காட்சிகளைக் கண்டுரசிக்கலாம். லாஃபா மலையில் 81 மலைமுகடுகளும் 72 குகைகளும் உள்ளதாக கூறப்படுகிறது. அது மிக துல்லியமான எண்ணிக்கை அல்ல என்ற போதிலும், அங்குள்ள அதிக குகைகள் உள்ளதையே இன்த எண்ணிக்கை விவாரிக்கிறது.
ஓ-ஆமாம், ஒரு மலையில் இப்படி அதிக குகைகள் இருப்பது மிக அரிது. அவற்றில் மிக சிறப்பான ஒன்றை அறிமுகப்படுத்தலாமா
ஈ-ஆமாம், ChuanXin குகையை சிறப்பாக கூறலாம். அது, லாஃபா மலையின் குகைகளில் மிக முக்கியமான ஒன்று. இம்மலையின் 2வது முகட்டில் அமைந்துள்ள அது, 3 குகை வாயில்களை கொண்டது. இந்த குகையில் சுமார் ஆயிரம் பேர் தாங்க முடியும். மேகமூட்டம், மழை, பனி முதலிய வேறுபட்ட வானிலைகளில் தோன்றும் காட்சிகள் வேறுபட்டவை.
ஓ-பல குகைகளை பற்றி செவிவழி கதைகள் உண்டு. அந்த ChuanXin குகை பற்றி ஏதாவது செவிவழி கதைகள் இருக்கா?
ஈ-ஆமாம். லாபா மலை பற்றி பல கதைகள் உள்ளன. ஆனால் அவை பெரும்பாலும் உண்மையானதல்ல. இருப்பினும், கதைகளின் மூலம் உள்ளூர் பண்பாட்டை கொஞ்சம் அறியலாம். அதனால் சுற்றுலாப் பயணத்தை மேலும் சுவையாக மாற்ற முடியும்.
ஓ-ஆமாம், மறக்க முடியாத சுற்றுலா அனுபவம், வாழ்க்கைக்கு மிக முக்கிய நினைவாக அமையும். நேயர்களே உங்களுக்கு மறக்க முடியாத சுற்றுலா அனுபவம் ஏதாவது இருந்தால், இணையத்தளம் அல்லது மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் தெரிவியுங்கள்.
ஈ-சரி, ஜிலின் மாநிலத்திலுள்ள லாஃபா மலையைத் தவிர, ChangBai மலையும் புகழ் பெற்றது. அது வடகிழக்கு சீனாவின் மிக உயரமான மலையாகும். தமிழ் பிரிவின் தேன் மொழி, அங்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இப்போது அவர் ChangBai மலை பயணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்.
வியப்புகுரிய குகைகளாலும் பல்வித பாறை வடிவங்களாலும் புகழ்பெற்ற லாஃபா மலை அமைந்துள்ள ச்சிலின் நகரம், சீனாவில், மாநில பெயரால் நியமிக்கப்பட்ட ஒரே ஓரு நகரமாகும். நகரைச் சுற்றியிருக்கும் மலைகளாலும், வளைந்து வளைந்து என்று செல்லும் சொங் குவா சியாங் ஆற்றால், ச்சிலின் நகரம் எழில்மிக்க காட்சியளிக்கிறது.
சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ச்சிலின் உறைபனிக்காகவே ச்சிலின் நகருக்குச் செல்கின்றனர். நீர் ஆவியாகி குளிர்ந்த காற்றைச் சந்தித்து, மரங்களின் கிளைகளில் உறைபனியாகத் திரவமாகுவது தான் ச்சிலின் உறைபனியின் சிறப்பு. சீன மொழியில் அதனை ஊ சொங் என்று அழைக்கிறோம். ஒரு நாள் ச்சிலின் நகரில் பயணம் மேற்கொண்டால், ஊ சொங் தீவு, சொங் குவா சியாங் ஆறு, பெய் தா ஹூ பனிச்சறுக்குத் தலம் ஆகிய இடங்கள் அடங்கிய சுற்றுலா நெறியைத் தெரிவு செய்யலாம். ஊ சொங் தீவில் இருந்தால் புனைக் கதையில் வரும் கற்பனைகளில் மிதப்பது தோன்றும். அங்கு வியப்பளிக்கும் ச்சிலின் உறைபனியைப் பார்க்கலாம். சொங் குவா சியாங் ஆற்றின் இரவுக் காட்சியில் பரபரப்பான ச்சிலின் நகரைக் காணலாம். பெய் தா ஹூ பனிச்சறுக்குத் தலத்தில் பனிச்சறுக்கி விளையாடலாம். குளிர் காலத்தில் பனிச்சறுக்குவதற்கு அங்குள்ள வாநிலை மிகவும் நல்லது. இது சர்வதேச நிலை விடுமுறை பனிச்சறுக்கு இடமே. விடுமுறை நாட்களில் 208 யுவானையும், வேறு நாட்களில் 128 யுவானையும் செலுத்தி கம்பிவட ஊர்தியில் செல்லலாம். காலை 8 முதல் மாலை நாலரை மணி வரை பனிச்சறுக்குத் தலம் திறந்திருக்கும்.
ச்சிலின் நகரிலுள்ள விமான நிலையம் லொங் சியா சர்வதேச விமான நிலையமாகும். நகரிலுள்ள 5 நட்சத்திர தங்கு விடுதிகளில் தங்கியிருப்பதற்கு குறைந்தது 400 யுவான் தேவை. சொங் குவா சியாங் ஆற்றின் இரு பக்கங்களில் ஊ சொங் தங்கு விடுதி, சி குவான் தங்கு விடுதி முதலியவற்றைத் தெரிவு செய்யலாம். நகரிலுள்ள ஹெ நான் வீதியில், ச்சிலின் நகரின் தனிச்சிறப்பு உற்பத்தி பொருட்களை விற்கும் கடைகள் அதிகம். இயற்கையாகக் கிடைக்கும் சீன மூலிகை மருந்து வகைகள் ச்சிலின் நகரிலும் தாரளமாக உள்ளன. சுமார் 70 வகைகள் இருக்கின்றன. நண்பர்களுக்கு நினைவுப் பொருட்களை வாங்குவதற்கு, சேகரிக்க மற்றும் ரசிக்கவல்ல கைவினைச் சிற்பங்கள் நல்ல தெரிவாகும்.