• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உரூமுச்சியின் பழைய சாலை
  2013-01-28 19:14:12  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் ஈஸ்வரி. இன்றைய நிகழ்ச்சியில் வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் உருமுச்சியிலான நூறு ஆண்டுகால வரலாறுடைய Er Dao Qiao வணிகப் பிரதேசம் பற்றி கூறுகின்றோம்.

பலவித பாடல்களை கேட்டுக் கொண்டே செல்லும் விதமாக, உருமுச்சியிலுள்ள Er Dao Qiao சாலை அமைந்துள்ளது. இங்கு வருவோர்கள் அனைவரும் அதைப் பாராட்டுகின்றனர்.

ErDaoQiao எனும் பழையப் சாலைக்கு வராமல் இருந்தால், சின்ஜியாங்கிற்கு வரவில்லை என்பதாகவே பொருட்படுகிறது. 1200 மீட்டர் நீளமான இந்தப் பழைய சாலையில், நாள்தோறும் சூரியன் கதிர்ந்தவுடன் கடைகள் திறக்கப்படுகின்றன. பல்வேறு நாடுகள் மற்றும் இனங்களை சேர்ந்த பயணிகள் இங்கு வந்து விரும்பிய பொருட்களை வாங்குவார். கடைகளிலிருந்து ஒலிக்கின்ற பல்வேறு நாடுகளின் பாடல்களும் மக்கள் பேரம் பேசும் ஒலியும் எப்போதும் கேட்கப்படலாம். வணிகர்கள், உய்கூர், ஹான், ஆங்கிலம், ரஷிய முதலிய மொழிகளில் வணிகப் பொருட்களை கூவி விற்பனை செய்கின்றனர்.

இந்த குறுகிய சாலையில் சின்ச்சியங்கின் இஸ்லாமிய பாணியுடைய கட்டிடங்கள் பல காணப்படுகின்றன. ErDaoQiao சந்தை, தேசிய இனப் பாணியுடைய சாலை, சின்ச்சியாங் சர்வதேச பாசார்த் ஆகிய 3 பகுதிகளிலிருந்து வரும் பயணிகளை ஈர்க்கின்றன.

19வது நுற்றாண்டின் இறுதி முதல், ErDaoQiao வணிகப் சாலை உருவாகி வருகிறது. நவ சீனா நிறுவப்பட்ட பிறகு, அதற்கு முன்பிருந்த வணிகச் சந்தையின் அடிப்படையில், இங்கு, மின்ச்சு வணிகப் பேரங்காடி மற்றும் துவென்ஜியெ நாடக அரங்கு கட்டியமைக்கப்பட்டன. அது முதல் இச்சாலை, புகழ் பெற்ற சிறுபான்மை தேசிய இன வணிக மையமாகப் படிப்படியாக மாறத் துவங்கியது.

Er Dao Qiao சாலை, ஒரு வணிகப் பிரதேசம் மட்டுமல்ல, இஸ்லாமிய மக்கள் கூடி வாழ்கின்ற பிரதேசமும் ஆகும். உய்கூர், ஹுய், ஹசாக் முதலிய இன மக்கள் இங்கு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

ஹுய் இனத்தின் முதியவர் ச்சி சியுயிங், தற்போது வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். 17 வயது முதல் அவர் சின்ச்சியங்கில் வாழ்ந்து வருகிறார். மறுசீரமைப்பு நடைபெறுவதற்கு முந்தைய வாழ்க்கை குறித்து அவர் மீட்ளாய்வு செய்து கூறியதாவது

அப்போது நாங்கள் வசித்த இடம், வசதியற்ற இடமாக இருந்தது. குணிரைபோக்க குளிர்காலத்தில் அடுப்பு மூலம் வெப்ப வசதி பெற வேண்டும். குழாய் நீர் வசதியும் இருக்கவில்லை என்று அவர் கூறினார்.

இன்னொரு முதியோர் ஜலாலி கூறியதாவது

முன்பு இங்குள்ள சாலைகள் மிக சிறிய சந்துக்களில் உள்ளவை போன்றிருக்கும். குளிர்காலத்தில் சாலையின் மேல் பெய்திருக்கும் பனியை அகற்ற வேண்டும். மே, ஜூன் திங்கள் வரை பனி உருகி நீர் வடிந்து கொண்டிருக்கும். அப்போது நீர் பயன்படுத்துவது மிக கடினம் என்று அவர் நினைவு கூர்ந்தார்.

1999ஆம் ஆண்டு மார்ச் திங்கள், உருமுச்சி நகர அரசு 50 கோடி யுவானை ஒதுகீடு செய்து Er dao Qiao பிரதேசத்தை பெருமளவில் மறுசீரமைத்தது. சிறுபான்மை தேசிய இனத் தனிச்சிறப்பைப் பேணிக்காப்பதை, குறிக்கோளாக கொண்டு இந்த மறுசீரமைப்பு நடைபெற்றது. இது குறித்து, Er dao Qiao வணிகப் பிரதேசக் கட்டுமானத் தலைமைக் குழுவின் தலைவர் வாங் ஜியெலிங் கூறியதாவது

அப்போது உருமுச்சி நகர அரசு, வளர்ச்சிக்கு இலக்குகளை வகுத்தது. அந்த இலக்கு, ஒரு சர்வதேச நவீன வர்த்தக நகரமாகக் கட்டியமைக்கப்பதாக இருந்தது. மத்திய ஆசிய மற்றும் மேற்காசியாவில் உருமுச்சி ஒரு பெரிய நகரமாகும். நகரத்தின் தனிச்சிறப்புக்களைப் பேணிக்காப்பது, அருகிலுள்ள மக்களின் வசிப்பிட நிலையை மேம்படுத்துவது, முதலியவை குறிக்கோளில் இடம் பெற்றிருந்தன என்று அவர் கூறினார்.

மறுசீரமைப்புப் பணி முடிந்த பிறகு, சின்ச்சியங் சர்வதேச சந்தை நிறுவப்பட்டது. அதன் நிலப்பரப்பு, சுமார் 40 ஆயிரம் சதுரமீட்டராகும். கட்டிடத் தொகுதியின் மொத்த நிலப்பரப்பு சுமார் ஒரு இலட்சம் சதுரமீட்டராகும். 80 மீட்டர் உயரமான காட்சிக் கோபுரம், ஒரு மசூதி, 8000 சதுர மீட்டர் பரப்புள்ள பொழுதுப்போக்கு சதுக்கம் முதலியவை அதில் அடங்குகின்றன.

மறுசீரமைப்புக்குப் பின், இங்குள்ள மக்கள் தேசிய இனத் தனிச் சிறப்புடைய புதிய வீடுகளில் வசிக்க தொடங்கினர். நீர், மின்சாரம், இயற்கை எரிவாயு, இணையம் முதலிய வசதிகளோடு வாழ்க்கை மிகவும் சொகுசாக மாறியுள்ளது.

Er dao qiao சாலையின் ஹுய் இன முதியோர் மெய்மிங் கூறியதாவது

முன்பு மண்ணிலான பழைய வீடுகளில் வசித்தேன். இப்போது புதிய மாடிவீடுகளில் குடிபெயர்ந்துள்ளேன். தற்போதைய சரிமட்டமான தார் சாலைகள் முந்தைய மேடும் பள்ளமுமான மண்சாலைகளுக்குப் பதிலாக விளங்கின என்று அவர் கூறினார்.

2003ஆம் ஆண்டு சர்வதேச சந்தைவீதி நிறுவப்பட்ட பின், Er dao qiao வணிகப் மையத்தின் சிறப்பை உயர்த்தியதோடு, அதன் வணிக பங்களிப்பையும் முழுமைப்படுத்தியது. வாங்ச்சியெலிங் கூறியதாவது

சந்தை மையம் கட்டியமைக்கப்பட்ட பின் உருமுச்சிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வணிகர்கள் வேகமாக பணம் சம்பாதிக்கின்றனர். இந்த சந்தை மையத்தின் நிலப்பரப்பு, துருக்கியின் இஸ்தான்புல் சந்தையை விட மேலும் ஒன்பதாயிரம் சதுர மீட்டர் பெரியது. எனவே, இதை உலகத்தின் மிக பெரிய சந்தை என அழைப்பதாக அவர் கூறினார்.

சின்ச்சியாங், மத்திய ஆசியா, மேற்காசியா ஆகிய இடங்களின் கைவினைப் பொருட்கள், வாழ்க்கை பயன்பாட்டுப் பொருட்கள் முதலியவை உருமுச்சி சந்தை மையத்தில் விற்கப்படுகின்றன. வணிக மையத்தின் சந்தை பிரிவின் மேலாளர் ச்சாங் சியொலுங் கூறியதாவது

விருந்தினர்களைத் தவிர, சந்தை மையத்தில் பணி புரிவோரின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 6000த்தை எட்டும். அவர்களில் 70 விழுகாட்டினர் சிறுபான்மை தேசிய இன வணிகர்கள். எனவே இங்குள்ள வணிகப் பொருட்கள் பெரும்பாலும் உய்கூர் இனத் தனிச் சிறப்புடையவை என்று அவர் கூறினார்.

தியென் மலையை மக்கள் பனி மலை என்று அழைக்கின்றனர். கோடைக் காலத்திலும் குளிர்காலத்திலும் அங்கு பனியைக் காணலாம். இதனால் பனி மலை என்ற பெயர் பெற்றுள்ளது. தியென் மலையின் இடைப் பகுதில் ஓர் அழகான ஏரியைக் காணலாம். ஏரியிலுள்ள நீர் பனி உருகியதால் தேங்கி கண்ணாடி போல் தெளிவாகக் காணப்படுகிறது. அந்த ஏரியும், அதன் நீரில் பிரதிபலிக்கின்ற மரங்களும் சேர்ந்து எழில் மிக்க ஓவியமாகக் கண்களுக்குத் தெரிகிறது. மலையின் உச்சிக்கு செல்ல கம்பிவட ஊர்தி உண்டு. நபருக்கு 30 யுவான் செலுத்தி, ஒரு நாளில் தியென் மலைக்குச் சென்று உரும்சிக்குத் திரும்பி விடலாம்.

, சில கோட்டைகள் போல், சில மாளிகைகள் போல் பல்வேறு உருவங்கள் காணப்படும் காட்சியிடத்தை நீங்கள் முன்பு கண்டிருக்கிறீர்களா?அது யா தான் நகரத்தில காணலாம். உய்கூர் மொழியில், யா தான் என்றால், ஆபத்தான செங்குத்துக் குன்றுகள் என்று பொருள். இது போன்ற நில அமைப்பு வறட்சியான இடத்திலுள்ள நிலத்திலும், பாறைகளிலும் காற்றின் பாதிப்பால் உருவாகுவதாகும். அங்குப் பயணம் மேற்கொண்டால் அதிக அதிசயங்களை காண்பது திண்ணம்.

உரும்சி நகரத்தின் டி வொ பாவ் சர்வதேச விமான நிலையம் சீனாவின் மேற்குப் பகுதியின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாகும். விமானம் மூலம் உரும்சிக்குச் செல்வது மிக வசதியான போக்குவரத்து வழிமுறையாகும்.

5 நட்சத்திர சின் சியாங் ஹொய் தாக் தங்கு விடுதி,ராய்ல் Iசர்வதேச தங்கு விடுதி முதலியவை முதல், வீட்டு விருந்தகம், சூபர் 8 தங்கு விடுதி முதலியவை வரை இங்குள்ளன.

சிறுபான்மை தேசிய இனங்கள் கூடும் இடமான உரும்சியில், உய்கூர், மங்கோலிய மற்றும் ஹூய் இனங்களின் உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன. மேலும் சின் ஜியாங்கின் காய்கறிகளும் பழங்களும் நன்றாக வரவேற்கப்படுகின்றன. பொதுவாக, சின் ஜியாங்கின் சிறப்பு உற்பத்தி பொருள்களைப் பல கடைகளில் வாங்கலாம். அவை தரம் மிக்கவை. விலையும் குறைவாக இருக்கும். உய்கூர் சிறப்புடைய கடைகளும் அதிகம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040