• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ச்சிசியா நகரத்தின் அற்புதக் கல் அருங்காட்சியகம்
  2013-01-28 19:40:52  cri எழுத்தின் அளவு:  A A A   
யென்தென் நகரத்தை சேர்ந்த ச்சியிஷா எனும் சிறிய நகரத்தை முன்பு அறிமுகப்படுத்தியுள்ளோம். அங்கு ஓர் அற்புதக் கல் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 2007ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்களில் அவ்வருங்காட்சியகம் இயங்க துவங்கியது. 5000 சதுர மீட்டர் நிலப்பரப்புடைய அது, சீனாவின் மிக உயர் நிலை கல் அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். அங்கு சுமார் 2000 அற்புத வகை கற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் பழங்கால எழுத்துக்கள், பாண்பாட முதலியவற்றின் வடிவங்களிலுள்ள கற்கள், இயற்கையின் அற்புதமான அழகான படைப்பாற்றலை வெளிப்படுத்துகின்றன.

இப்போது நீங்கள் கேட்டு கொண்டிருப்பது ஓர் அழகான செவிக்கதை எனும் சீன நாட்டுப்புறப் பாடலாகும். அழகான கற்கள் பாடல்களைப் பாடலாம் என்று அதன் வரிகள் கூறுகின்றன. அது போலவே, கற்கள் கதைகளையும் வரலாற்றையும் வெளிப்படுத்தலாம் என்று ச்சிசியா நிலவியல் அற்புதக் கல் அருங்காட்சியகத்தின் தலைவர் மங் சியென்யுன் கூறினார்.

இங்குள்ள கற்கள் சிறந்த நோக்கத்தால் அருங்காட்சியகத்துக்கு வந்துள்ளன. கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளின் நிறுவனங்கள், இந்த கற்களை வாங்க விரும்பின. ஆனால், கற்களின் உரிமையாளர்கள் இத்தகைய அற்புதக் கற்களை குழந்தைகளைப் போல பாதுகாக்கின்றனர். அவர்கள் கற்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவோ விற்கவோ விரும்பவில்லை. எனவே, ச்சிசியாயில் அக்கற்களை சேமித்து காட்சிக்கு வைக்க விரும்புகின்றனர் என்று அவர் கூறினார்.

யுவன் கெயெ தம்பதி, அற்புதக் கற்களைத் திரட்டி சேமிப்பதில் அறிஞர்களாவர். அருங்காட்சியகத்தின் தலைவர் மங்சியெயுன், ற்புதக் கற்கற் தொடர்பான துண்டிக்கப்பட்டாத ஆய்வை யுவான் கெயெ தம்பதியரை அறிய பிறகு துவங்கினர்.

2006ம் ஆண்டு யுவன் கெயெ தம்பதியை அறியவந்தேன். அவர்கள் திரட்டிய கற்களைப் பார்த்து வியப்படைந்தேன். அரிய, மதிப்புக்குரிய அத்தகைய செல்வங்களை கண்டு மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அப்போது, அற்புதமான கற்களை எனது ஊரான ச்சிசியாவுக்கு அறிமுகப்படுத்த முடிவெடுத்தேன். ச்சிசியா மக்களையும் ச்சியாவில் சுற்றுலா செய்பவர்களையும் இயற்கையின் அற்புதமான இத்தகைய படைப்புகளைக் கண்டுரசிக்கச் செய்ய உறுதிபூண்டேன் என்று அவர் கூறினார்.

நீண்டகாலமாக, அவர் கற்களை பற்றிய ஆழமான ஆய்வை மேற்கொண்டுள்ளார். அவரது மனதில், கற்கள், அவரது நண்பர்கள். வேதனைகளை சந்திக்கும் போது அருங்காட்சியகத்துக்குச் சென்று இந்த அற்புதமான கற்களைக் கண்டுரசித்தவுடன் மனநிம்மதி அடையலாம் என்று அவர் கூறினார்.

கற்களை பற்றி அதிகமாக அறிந்தால் அவற்றின் அருமையான தன்மையை உணர்ந்து ஆழமாக கவரப்படுவீர்கள். இது தான், அற்புதக் கற்களின் ஈர்ப்பாற்றலாகும் என்றும் மங் சியெயுன் கூறினார்.

தனிச்சிறப்பு மிக்க கற்களைக் கண்டுரசிக்கும் பண்பாடு, சீனாவில் சில ஆயிரம் ஆண்டுகளாக நிலவி வருகிறது. ஒவ்வொரு கல்லுக்கும், உயிராற்றல் உண்டு. ஓர் அருமையான கல் உருவாக, கோடிக்கணக்கான ஆண்டு காலம் தேவைப்படும். அதன் உயிராற்றல் மிக வலிமையானது. எனவே, இத்தகைய கற்களைக் கண்டுரசிப்பதன் மூலம், மேம்பட்ட எண்ணங்களையும் ஒழுக்கங்களையும் பெற முடியும். கற்களின் அழகான தூய்மையான கலை வடிவங்களைப் பார்த்து மகிழலாம். மக்களை அற்புதமான இயற்கையோடு இணைந்து வரை அறிவுறுத்தலாம். எனவே தான், அற்புதமான கற்கள் பாடல்களை பாடலாம் என்று கூறப்படுவதாக மங்சியெயுன் கூறினார்.

அற்புதமான கற்கள், இயற்கை வழங்குகிற செல்வமாகும். இந்த கற்களை உருவாக்கும் வேறுபட்ட காரணங்களை வைத்து, நீர் உருவாக்கிய கல், தீ உருவாக்கிய கல், காற்று உருவாக்கிய கல், பழங்கால உயிரின புதை படிவக் கல் என பல வகைகளாக பிரிக்கப்படலாம். அருங்காட்சியகத்திலுள்ள, வழிகாட்டி கற்கள் பற்றிய தகவல்களை அறிமுகப்படுத்துகிறார்.

இவ்விரண்டு கற்களைப் பாருங்கள். அவை மியான்மார் மரங்களின் புதை படிவமாகும். இத்தகைய மரம், தங்கத்தை விட அதிக மதிப்புக்குரியது. எனவே, அதன் புதை படிவம் மிகவும் மதிப்பானது என்று அவர் கூறினார்.

வழிகாட்டி கூறியதைப் போல, அருங்காட்சியகத்திலுள்ள ஒவ்வொரு கல்லும், உலகில் தனிச்சிறப்புடைய ஒரே ஒரு கல்லாகும். அவர் மேலும் கூறியதாவது

இது, சீன குவங்சியிலான எரிமலை கல்லாகும். தீயினால் உருவான இந்த கல் கொண்டு கத்தியை கூர்மை செய்யலாம்.

வழிகாட்டியின் அறிமுகப்படுத்துவதைக் கேட்டு, அழகான அற்புதமான கற்களைக் கண்டு, அருங்காட்சியகத்தின் தலைவர் மங் சியெயுன் உணர்ச்சி வசப்பட்டு கூறியதாவது

கற்களுக்கு சிறப்பான சிறப்பியல்புகள் உள்ளன. சில பயணிகள் நான் உணர்ச்சி வசப்படுவதை போல சிறப்பு உணர்வுகளை பெற விரும்புகின்றனர் என்று அவர் கூறினார்.

முன்பு இவ்வருங்காட்சியகத்தைக் கேள்விப்பட்ட பயணி திருமதி லியூ அம்மையார், அங்கு வந்து பார்வையிட்ட போது, கற்கள் அவரை ஆழமாக கவர்ந்திருந்தன. அவர் கூறியதாவது

இந்த கற்கள் மிகவும் சாதாரணமானவை என்று முன்பு நினைத்தேன். ஆனால், இங்குள்ள அற்புதமான கற்களைப் பார்த்த பின் மிகவும் கவரப்பட்டுள்ளேன். இயற்கை பற்றிய அரிய அறிமுகத்தை அதிகமாக அறிந்தேன் என்று அவர் கூறினார்.

கற்களை பற்றிய விழிப்புணர்வு, கண்டுரசித்தல், கலைத் தன்மை முதலியவற்றைக் கொள்கின்ற ச்சிசியா நிலவியல் அற்புதக் கல் அருங்காட்சியகம், மிகவும் வரவேற்கப்படும் அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். மேலதிக மக்கள், கற்களின் மதிப்பை அறியச் செய்து உள்ளூர் சுற்றுலா பொருளாதாரத்தையும் அது ஊக்குவித்து வருகிறது.

யென் தாய் தொலைதூரப் பேருந்து நிலையத்திலிருந்து புறபட்டு ச்சியிஷா தோட்ட நிலையத்தில் இறங்கி, சில நிமிடங்கள் நடந்தபின், புகழ்பெற்ற முஷித் தோட்டத்தைக் காணலாம். காலை ஏழரை மணி முதல் மாலை 6 மணி வரை அது திறந்திருக்கும். இத்தோட்டத்திற்கு நுழைவுச்சீட்டுக் கட்டணம் 30 யுவான்.

யென் தாய் நகரத்தில் அமைந்துள்ள பெங் லாயி என்ற இடம், பண்டைக் காலம் தொட்டு, மர்மவுலகத்துடன் ஆழமான தொடர்பு கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. சின் ஷி ஹூவாங் என்ற சீனாவின் முதல் பேரரசன் நீண்ட ஆயுள் நாடியது, அழியா வாழ்வுடைய 8 பேர் கடல் கடந்தது முதலிய புராணக் கதைகள் இங்கிருந்து தான் தொடங்குகின்றன. பாங் லாய் மாளிகை பாங் லாய் நகரின் வட பகுதியிலுள்ள மலையில் அமைந்துள்ளது. அங்கு கோயில்களும் தோட்டங்களும் மலையுடன் ஒட்டிய வண்ணம் கட்டியமைக்கப்பட்டதால், அது மலை அழகுக்கு இணக்கமான கோலாகலமான காட்சியை அளிக்கிறது. காலை 7 முதல் மாலை 6 மணி வரை பாங் லாய் மாளிகை திறந்திருக்கும். அனுமதிக் கட்டணம் 100 யுவான்.

பாங் லாய் மாளிகை போன்ற இன்னொரு சிறந்த இடம் சான் ஷியான் மலையாகும். அது சீனப் புராணக் கதையின் தோற்றுவாயாகத் திகழ்கிறது. ஷா சியென் மலையிலுள்ள மூன்று புத்தச் சிலைகள் மதிப்பு கணக்கிட முடியாத சிலைகளாகும். காலை 7 மணி முதல் மாலை மூன்றரை மணி வரை அது திறந்திருக்கும். நுழைவுச் சீட்டுக் கட்டணம் 120 யுவான்.

யென் தாய் நகரத்தின் லாயி ஷான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மக்கௌ, ஹங்காங் முதலிய இடங்களுக்குச் செல்லும் சர்வதேச விமானப் பறத்தல் நெறிகள் வசதிகள் உள்ளன. மேலும், பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ, ஷியாமன் உள்ளிட்ட 20க்கு மேலான நகரங்களுக்குச் செல்லும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து வசதிகளும் அங்கு உள்ளன.

யென் தாய் நகரில் உணவகங்களும் தங்கு விடுதிகளும் அதிகம். பின் ஹாயி சர்வதேச உணவகம், குவா மெய் தா சதுக்க உணவகம் 5 நட்சத்திர நிலை உணவகங்களாகும். அங்கு ஒரு நாள் தங்குவதற்கான் கட்டணம் சுமார் 500 முதல் 600 யுவான் வரை ஆகும். பாங் லாயில் மீனவர்கள் நடத்தும் வீட்டு விடுதிகளும் அதிகம். அங்கு ஒரு நாள் உணவு மற்றும் தங்கியிருப்பதற்கான கட்டணம் சுமார் 60 யுவான். அவற்றின் வசதி நன்றாக இருக்கும்.

நகரின் மையப் பிரதேசத்தில் அமைந்துள்ள தெற்குச் சாலை, யென் தாய் நகரின் மிக பரபரப்பான வணிகப் பிரதேசமாக விளங்குகிறது. வீதியின் இரு பக்கங்களிலும் தாராளமான கடைகளைக் காணலாம். மேலும், ஷா சான் மொத்த விற்பனைச் சந்தையும், லியாங் யூ சதுக்கமும் பொருட்களை வாங்குவதற்கான நல்ல இடங்களாகும். அன்றாட வாழ்க்கைப் பயன்பாட்டுப் பொருட்கள் அனைத்தும் அங்கு கிடைக்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040