சுபஸ்ரீ மோஹன் வளர்ந்தது எல்லாம் பெரும்பாலும் மதுரை மற்றும் அதன் அருகில் இருக்கும் ஊர்களில்தான். மதுரை காமராஜ பல்கலை கழகத்தில் பட்டபடிப்பை முடித்தார். திருமணத்திற்குபின் இந்தியாவில் பல நகரங்களில் வாசம் வந்தார். இப்போது பெய்ஜிங்கில் அவரது கணவர் ஒரு பன்னாட்டு நிருவனத்தின் ஆசியாவின் பொறியியல் இயக்குனரான பதவியில் இருக்கிறார்.
சிறுவயதிலிருந்து சுபஸ்ரீ அவர்களுக்கு தமிழில் மிக ஆர்வம் உண்டு; சுபா என அன்புடன் அழைக்க படும் சுபஸ்ரீ ஒரு சிறந்த எழுத்தாளர். ஆனந்த விகடன் மற்றும் க்ருஹ ஷோபா இதழ்களில் இவரது கட்டுரைகள் வந்துள்ளன. சமீபத்தில் ஆனந்த விகடன் தீபாவளி மலரில் பளிங்கினால் ஒரு மாளிகை எனும் சீனாவின் பாரம்பரிய கட்டிடங்கள் மற்றூம் நினைவு சின்னங்களை பற்றி ஒரு சிறப்பான கட்டுரை வந்துள்ளது. சீன வானொலி நிலயம் சீனவின் சில நகரங்களை பற்றிய இவரின் சுற்றுலா கட்டுரையை இணைய தளத்தில் பதிவு செய்ய உள்ளது. ஓவியகலையிலும், இந்திய சமையல் செய்வதில் இவர் ஒரு வல்லவர் .சமூக சேவை செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.