• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாவோலின் கோவில்
  2013-04-22 11:15:38  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன மொழியில் வூஷூ என்றால் ராணுவ சண்டை கலை என்று பொருள். வூ என்பது ராணுவத்தையும் ஷூ என்பது திறமையும் அல்லது வழிபாட்டையும் குறிக்கின்றன. சீன சண்டை கலை என்றாலே நம் எல்லோருக்கும் தெரிந்தது. குங்ஃபூ தான். இங்கு கடினமான பயிர்ச்சியால் மேல் நிலை அடையும் எந்த திறமைக்கும் குங்ஃபூ என்று பெயர். வூஷூ கலையில் அகத்திற்குள்ளும், உடம்பிற்கு வெளியில் மிக கடினமான பயிற்சி, மற்றும் மன ஒருமைபாடும் மிகவும் முக்கியமானதாகும் இதில் பல பிரிவுகள் உண்டு. யோக கலையை உள்ளடக்கிய பயிற்சி முறைகளும் உண்டு. புத்தமதம் இங்கு பரப்புவதற்காக

வெய் வம்சவழி அரசர் இந்த கோவிலை கட்டினார். புதாவ் என்றழைக்கப்படும் புத்தபத்ரா என்ற இந்திய துறவிக்கு உதவி செய்யும் பொருட்டு இந்த கோவில் கட்டப்பட்டது.. அதன் பின் மற்றொரு துறவி போதிதர்மர் என்று அழைக்கப்படும் துறவி இங்கு வந்து ஒன்பது ஆண்டுகள் தங்கி ஒரு குகையில் தியானம் செய்துள்ளார், அப்போது அந்த குகையின் மேல் வெயிலே படாமல் இருந்ததாகவும், இன்றும் அந்த குகை இருக்கிறது. இந்த கோவிலின் வாயிலில் போதிதர்மரது சிலை மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது. சென் புத்த மதத்தினை பரப்பினார். இங்கு துறவிகளுக்கு தற்காப்பு கலையையும் போதித்தார்.

அங்கே நாங்கள் பார்த்த கோவில், போதிதர்மரின் குகை, பகோடா வனம் என அழைக்கபடும் புத்த விகாரம் மற்றும் மலை எல்லாம் மிக அழகாக இருந்தது. அனால் எல்லாவற்றிற்கும் மேலானது ஷாவோலின் கோவிலின் குங்க்ஃபூ தற்காப்பு கலைதான். இதை மிக அழகாக ஒரு கலை அரங்கத்தில் சிறு வயது மாணவர்கள் செய்முறை விளக்கத்தை பயிற்சி செய்து காட்டினார்கள். ஒரு சிறு குண்டூசியினால் ஒரு கண்ணாடி பலகையில் ஒரு சின்ன ஓட்டையை போட்டு அதற்கு அந்தபுறம் இருக்கும் ஒரு பலூனை உடைத்து காண்பித்தார் ஒரு மாணவர். குருகுலவாசம் இருந்து பயிலும் கலை தான் இந்த குங்க்ஃபூ தற்காப்பு கலை. இது எவ்வளவு கடினம் என்பதை காண்பிக்க பார்வையாளர் சிலரை இந்த கலயை மாணவர்களுடன் செய்து காண்பிக்க ஒரு வாய்ப்பு கொடுக்கிறார்கள். மாணவர்கள் மரத்தைஅழுத்தி தனது விரலை பலப்படுத்தி கொண்டதற்கு மரங்களின் மேல் குழி, குழியா விழுந்திருக்கும் அடையாளமே சாட்சி. எல்லோரும் அது சும்மா மரத்தில் உளி கொண்டு செதுக்கியிருப்பார்கள் என்று விதண்டாவாதம் செய்தனர். பின் அந்த மாணவர்கள் சில பயிற்சிகள் செய்து காட்டியபோது அது நிஜம்தான் என்று எண்ண வைத்தது.

1 2 3 4 5
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040