இது பிசாசின் செயலாக இருக்குமோ என்று நினைத்து சீன அரசாங்கத்திடம் முறையிட்டனர் விவசாயிகள். பின் சீன அரசாங்கம் அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி பணியில் நிபுணர் குழுக்களை ஆராயும் பணியை ஒப்படைத்தது. அப்போது தான் சீனாவின் மற்றொருஅதிசிய உலகத்தின் கதவு திறந்தது. கி.மு. 246 ம் ஆண்டு சைனாவின் சின் வம்சத்தைசேர்ந்த பதிமூன்று வயது பாலகன் அரியனை ஏறினான். பாலகன் என்றாலும் மிகவும் திறமைசாலி. பலருடன் போரிட்டு எல்லா இடங்களையும் தன்னாட்டுடன் இணைத்துக்கொண்டான். சி ஷி ஹுவாங் என தன்னை அழைத்துக்கொண்டான். சில நல்ல செயல்களையும் செய்தான். நாணயத்தை தேசியமயமாக்கினான். எடை கற்களையும் கண்டுபிடித்தான்.