• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
[முக்கியமான தேசிய இன விழாகள்]
  2013-11-04 14:17:13  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் முக்கியமான தேசிய இன விழாகள்

சீனாவில் சிறுபான்மை தேசிய இனங்களின் விழாகளும் கொண்டாட்ட நடவடிக்கைகளும் மிகவும் அதிகம். ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் முக்கிய விழா உண்டு. எடுத்துக்காட்டாக, திபெத் நாள் காட்டியின் படி திபெத் இனத்தின் புத்தாண்டு, தைய் இனத்தின் நீர் தெளிப்பு விழா, யீ இனத்தின் தீப விழா, பைய் இனத்தின் மார்ச் திங்கள் வீதி, சுவாங் இனத்தின் பாடல் விழா, மங்கோலிய இனத்தின் நதாமு விளையாட்டு விழா முதலியவை குறிப்பிடத்தக்கது. சில தேசிய இன விழாக்களுக்கு சட்டப்பூர்வ விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, திபெத் நாள் காட்டியின் படி புத்தாண்டு, குர்பான் விழா என்பன அவற்றில் அடங்கும்.

குர்பான் விழா

குர்பான் விழா, இஸ்லாமிய மதத்தின் பாரம்பரிய விழாவாகும். குர்பாங் என்றால், வீட்டு வளர்ப்பு விலங்குகளை கொன்று பலியிடுவது என்பது பொருள். இதனால், அது "ஈர் உல் குர்பான்(Id al-kurban)" என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் ஹுய், உய்கூர், ஹசாக், உஸ்பெக், தஜீக், தாதர், கர்கஸ், லாசா, துங் சியாங், பாவ் ஆன் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் இஸ்லாமிய இனத்து மக்களின் விழா இதுவாகும். இஸ்லாமிய நாள் காட்டியின் படி, 12வது திங்கள் 10ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு முன், ஒவ்வொரு குடும்பமும் வீட்டை துப்புரவு செய்து, பல்வகை cake பரபரப்பாக தயாரிக்கின்றன. திருவிழாவின் அதிகாலையில் முஸ்லிம்கள் குளித்து, மசூதிக்குச் சென்று, இமாம் விளக்கிக்கூறுவதைக் கேட்கின்றனர். ஒவ்வொரு குடும்பங்களும் ஆடு, ஒட்டகம் அல்லது மாடுகளை கொன்று, உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி, விருந்தினர்களை வரவேற்கின்றனர். அவர்கள் ஒன்று கூடி ஆட்டிறைச்சி, சிற்றுண்டி மற்றும் பழங்களை உண்டு உரையாடுவர். சின் சியாங் உய்கூர் இனம் குர்பான் விழாவைக் கொண்டாடும் போது, பெரும் பாடல்-ஆடல் கூட்டத்தை நடத்துகிறது. ஹசார், கர்கஸ், தஜீக், உஸ்பெக் முதலிய தேசிய இனங்கள் குதிரைப் பந்தயம், மல்யுத்தம் முதலிய போட்டிகளையும் நடத்துகின்றன.

முஸ்லிம் மக்கள் குர்பான் விழா

நோன்பு முடிப்பு விழா

"Id al-Fitr" என்று அரபு மொழியின் பொருள்படி மொழிப்பெயர்க்கப்படுகிறது. சீனாவின் ஹுய், உய்கூர், ஹசாக், உஸ்பெக், தஜிக், தாதர், கர்கஸ், சாலா, துங் சியாங், பௌ ஆன் உள்ளிட்ட சிறுபான்மை தேசிய இனங்கள் இந்த திரு நாளை கொண்டாடுகின்றன. இஸ்லாமிய நாள்காட்டியின் படி 10வது திங்கள் தொடக்கத்தில் இது வரும். இஸ்லாமிய நாள்காட்டியின் படி ஒவ்வொரு ஆண்டின் 9வது திங்கள் நோன்பு மாதமாக அழைக்கப்படுகிறது. சில சமயம் நோன்பு மாதத்தில் 29 நாட்கள் உள்ளன. சில சமயம் 30 நாட்கள் உள்ளன. இந்த காலத்தில், நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன் முஸ்லிம்கள் உணவு சாப்பிட்டு விட வேண்டும். சூரியன் உதித்த பிறகு பகல் முழுவதும், பசித்தாலும் உணவு சாப்பிடக் கூடாது. நீரையும் குடிக்கக் கூடாது. புகை பிடிக்கும் மக்கள் தற்காலிகமாக புகை பிடிக்கக் கூடாது. தவிர, Allah மீது நம்பிக்கை கொள்வதற்காக, நோன்பு மாதத்தில், முஸ்லிம்கள் உடல் உறவு கொள்ளக் கூடாது. அனைத்து சுய விருப்பத்தையும் அடக்கி கட்டுப்படுத்த வேண்டும். கெட்ட எண்ணத்தையும் அழித்தொழிக்க வேண்டும். குழந்தைகள், முதியோர் மற்றும் பலவீனர் ரம்சான் விழாவை கொண்டாட வேண்டாம். மாதத்தீட்டு காலத்திலுள்ள மகளிர் ரம்சான் விழாவை நடத்த கூடாது. ஆனால் அவர்கள் பொது இடங்களில் உணவு சாப்பிட முடியாது. நோயாளிகளும் சாலையில் விரைந்து செல்கின்றவரும் ரம்சான் விழாவை நடத்த வேண்டாம். ஆனால் பிறகு அவர்கள் இதை நடத்த வேண்டும். தண்டனையாக, மீண்டும் நடத்த முடியாதவர் பணத்தையும் பொருட்களையும் வழக்க வேண்டும். இரவில் ரம்சான் முடிவு அடையும் போது, மசூதியில் மணி ஒலித்ததும் மக்கள் உணவுப் பொருட்களை சாப்பிடலாம். அப்போது சாலையில் செல்கின்றவர்கள் பசியெடுத்தால், முன்பின் தெரியாதவரின் வீட்டுக்குச் சென்றால், அவர் உளமார வரவேற்கப்படுவார். விருந்தையும் உண்ணலாம்.

நோன்பு முடிப்பு விழாவுக்கான கொண்டாட்டம் கோலாகலமாக இருக்கிறது. இதற்கு முன்னதாக, மக்கள் வீடுகளை பூசி மெழுகி, முற்றத்தில் துப்புரவு செய்து, சிகை அரங்காரம் செய்து, குளிக்கின்றனர். இளைஞர்கள் அடிக்கடி இந்த காலகட்டத்தில் திருமாணம் செய்கின்றனர்.

திபெத் புத்தாண்டு

திபெத் புத்தாண்டு, திபெத் இனத்தின் மிக முக்கியமான கோலாகலமான தேசிய இன விழாவாகும. திபெத் நாள் காட்டியின் படி, முதலாவது திங்கள் முதல் நாள் இது துவங்கி, 15 நாட்களாக தொடரும். புத்தாண்டு நாள் ஒட்டி, விடியற்காலையில் விழா உடை அணிந்த இளைஞர்கள் பரஸ்பரம் வாழ்த்துகின்றனர். அதிர்ஷ்டம் என்று சொல்ல வேண்டும். கவர்ச்சிகரமாக உடை அணிந்த திபெத் இன மக்கள் அருகிலுள்ள கோயில்களுக்கு சென்று, புத்தரை வழிபடுகின்றனர், அல்லது அவர்கள் வீதிகளில் பாடல் பாடி நடனம் ஆடுகின்றனர். உற்றார் உறவினர் அல்லது நண்பர்களின் வீட்டில் விருந்தாகப் போகக் கூடாது.

(குதிரையில் சவாரி செய்து நிகழ்ச்சி அரங்கேற்றுவது)

நதாம் விளையாட்டு போட்டி

நதாம் விளையாட்டு போட்டி, உள்மங்கோலியா, கான் சு, சிங் ஹாய், சின் சியாங் ஆகிய இடங்களிலுள்ள மங்கோலிய இன மக்களின் பாரம்பரிய விழாவாகும். ஒவ்வொரு ஆண்டின் ஜூலை, ஆகஸ்ட் திங்களில் இது நடைபெறுகிறது. அப்போது புல் நன்றாக வளர்கிறது. கால்நடைகள் கொழுகொழு என்று காணப்படுகின்றன. காலநிலை சீராக உள்ளது. நதாம் என்றால், மங்கோலிய மொழியில், பொழுது போக்கு அல்லது விளையாட்டு என்பது பொருள். இதற்கு நீண்டகால வரலாறு உண்டு. முன்பு, நதாம் காலத்தில், பெருமளவு வழிபாட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். லாமா ஊதுவத்திகளை கொளுத்துகிறார். விளக்கு ஏற்றி, பன்ன ஓதி, துயரம் நீக்குவதற்காக, கடவுளுக்கு பிரார்த்தனை செய்கின்றனர். தற்போது, நதாம் விளையாட்டு போட்டியில், மல்யுத்தம், குதிரைப் பந்தயம், அம்பு எய்தல் உள்ளிட்ட தேசிய இன பரம்பரை விளையாட்டுக்கள் முக்கியமாக இடம்பெறுகின்றன. சில இடங்களில், தடகள போட்டி, வடம் இழுக்கும் போட்டி, கூடை பந்து, கை பந்து முதலியவை இந்த விளையாட்டு போட்டிகளில் அடங்கும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040