• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சரின் கேலிச்சித்திரம்
  2014-03-06 15:48:02  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன அரசின் இணையத்தளத்தில், அரசவை செயற்குழுக் கூட்டம் பற்றிய நிழற்படச் செய்திகள் அண்மையில் வெளியியாயின. சீனத் தலைமையமைச்சர் லீ க்ச்சியாங்கின் கேலிச்சித்திரம் அதில் இடம்பெறுகின்றது. அவரது கேலிச்சித்திரத்தை வெளியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அரசும் சின்குவா செய்தி நிறுவனத்தின் பல்லூடக மையமும் இக் கேலிச்சித்திரத்தை உருவாக்கின. லீ க்ச்சியாங் அரசவை செயற்குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதை இந்த கேலிச்சித்திரம் குறிப்புணர்த்தியது.

இதற்கு முன்பு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங்கின் கேலிச்சித்திரத்தை ச்சியாங்லொங் எனும் இணையதளம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

-

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040