• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன நாட்டுப்புறக் கதை செல்லும் மூதாட்டி லீ மீங் அம்மையார்
  2014-06-17 15:29:47  cri எழுத்தின் அளவு:  A A A   

லீ மீங் என்னும் மூதாட்டிக்கு வயது 78. அவர் லீயாவ் நிங் மாநிலத்தின் தா லியன் நகரில் வாழ்கின்றார். இந்நகரில் அவர் "கதை சொல்லும் பாட்டி" என அழைக்கப்படுகின்றார்.

லீ மீங் அம்மையாரின் தாய், மஞ்சு இன மருத்துவர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். அவர் எழுதறிவில்லாதவராக இருந்தபோதிலும், அதிக கதைகளை தெரிந்து வைத்திருந்தார். குழந்தைப் பருவத்தில், பல கதைகளைச் சொல்லுமாறு அம்மாவைக் கேட்டுக்கொண்டே, வீட்டுப் பணிகளில் லீ மீங் அம்மையார் அம்மாவுக்கு உதவுவதுண்டு.

"எனது ஊர், லியாவ் நிங் மாநிலத்தின் லியாவ் துங் மாவட்டத்தில் உள்ளது. எனது அம்மா, அபார நினைவு ஆற்றலுடையவர். "வூ ஃபெங் குய் (Wu Feng Hui)" என்னும் சீன நாட்டுப்புறக் கதை புத்தகத்தை அவர் மனப்பாடம் செய்து வைத்திருந்தார். அந்நூலில் ஆயிரக்கணக்கான எழுத்துக்கள் இருக்கின்றன. நான் சிறுமியாக இருந்தபோது, பண்பாடு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அதிகமாக இல்லை. எனவே முதியோர் கதை சொல்வதைக் கேட்பதே, பெரும் மகிழ்ச்சி தந்தது" என்று லீ மீங் அம்மையார் கூறினார்.

15 வயதாக இருந்தபோது, அவர் தா லியன் நகருக்கு வந்தார். அங்கேயே வேலை செய்த அவர், அங்கேயே திருமணமும் செய்தார். அவருக்கு குழந்தைகள் பிறந்தவுடன், தமது தாயைப் போல், லீ மீங் அம்மையாரும் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லி கொடுக்க தொடங்கினார்.

1950ஆம் ஆண்டுகளில், தா லியன் நகரின் கலை இலக்கிய கூட்டமைப்பும், பண்பாட்டு பணியகமும், நாட்டுப்புற கலைஞர்களை ஆக்கப்பூர்வமாக தேடி, வளர்த்தன. அக்காலக்கட்டத்தில்தான் லீ மீங் அம்மையார் இனம் காணப்பட்டார். தா லியன் நகரின் கலை இலக்கிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் Shao Mo Xia நவ சீனா நிறுவப்பட்ட துவக்க காலத்தில், லீ மீங் அம்மையாரை பற்றி கேள்விப்பட்டார்.

"நாட்டுப்புறக் கதைகளுக்கு சிறந்த மேம்பாடு உள்ளது. அவை பொது மக்களுக்கிடையே பரவி வருகின்றன. எனவே சீனப் பண்பாடு தொடர்பான அதிக அம்சங்கள் இக்கதைகளில் உள்ளடங்கியுள்ளன. சீனர்களின் ஒழுக்க நெறி கண்ணோட்டம், அழகியல் கருத்து, சரியான மற்றும் தவறான கருத்துகள், அன்பு, பகைமை முதலியவை இக்கதைகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன" என்று Shao Mo Xia கூறினார்.

கதை சொல்லுவதால், லீ மீங் அம்மையாரின் பண்பாட்டு அறிவு அதிகரித்துள்ளது.

லீ மீங் அம்மையார் அதிக கதைகள் அறிந்த நாட்டுப்புறக் கலைஞராக திகழ்கின்றார். அவர் சொல்லும் கதைகளில், சீனப் பாரம்பரிய பண்பாட்டின் உண்மையான சுவையும், இரசனையும் கலந்துள்ளன. அவற்றின் அடிப்படையில் அவரால் புதிதாக புகுத்தப்பட்ட சிறப்பு பண்பாட்டு அம்சங்களும் இடம்பெறுகின்றன. அதிக கதை அறிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கிடையே அவர் புகழ் பெற்று விளங்குவதற்கு இது காரணமாகும்.

"நாட்டுப்புறக் கதைகள் நகரங்களில் பரவ தொடங்கிய பிறகு, அவற்றின் பல அம்சங்கள் மாறியுள்ளன. புதிய மொழி சொல்லாடல்களும், புதிய கண்ணோட்டங்களும் இக்கதைகளில் சேர்க்கப்பட்டுள்ளன. லீ மீங் அம்மையாரின் கதைகளில், உள்ளூர் பேச்சு வழக்கு இலக்கியங்களும், சீனப் பாரம்பரிய பண்பாட்டின் அம்சங்களும் காணப்படுகின்றன. நாட்டுப்புறக் கதைகள், பரவி வரும் போக்கில், அவை புதிதாக புகுத்தப்பட்டுள்ளன. லீ மீங் அம்மையாரிடம் தன்னிகரற்ற புரிந்துணர்வு காணப்படுகிறது. அவர் கதைகளில் புதிதாக புகுத்திய அம்சங்கள் மிகவும் நல்லவை" என்று Shao Mo Xia கூறினார்.

நாட்டுப்புறக் கதைகளை, பல்வேறு தலைமுறையினர் மறுசீரமைத்து காலத்திற்கேற்ப இயற்றுதல் மூலம் மென்மேலும் சீராக வளர்ந்து இருக்கின்றன. இந்த தன்மையில் ஊன்றி நிற்கின்றேன். மக்கள் ஒவ்வொரு முறையும் கதை சொல்லும் போது ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவர் சொல்லும் கதையும் ஒரே மாதிரியானதல்ல. கதையில் புதிய அம்சங்களை புகுத்துதல் தேவை. ஆனால், இவ்வாறு மறுசீரமைத்து காலத்திற்கேற்ப இயற்றப்பட்ட உள்ளடக்கங்கள், ஒருதையின் கருவிலிருந்து பிரிக்கப்படுவதில்லை என்று லீ மீங் அம்மையார் கூறினார்.

எழுத்துக்களின் மூலம், தமது பேச்சு வழக்கு இலக்கியத்தைப் பதிவு செய்ய விரும்புவதாக லீ மீங் அம்மையார் தெரிவித்துள்ளார். 1985ஆம் ஆண்டு, "வெள்ளை போணிகஸ்-லீ மீங்கின் கதைகள்" என்னும் புத்தகம் வெளியானது. இது, நாட்டுப்புற இலக்கிய அறிஞரும், நவீன உரைநடை படைப்பாளருமான திரு Zhong Jing Wenவின் உயர்வான பாராட்டைப் பெற்றது. "நாட்டுப்புறக் கதைகள்" தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு அறிவு புகட்டி வளர்த்து விடும் வேளையில், லீ மீங் அம்மையாரின் கதைகள் புதிய கட்டத்தில் காலடியெடுத்து வைக்கச்செய்துள்ளன.

இலக்கியத்தை நேசிக்கின்றேன் என்றும், நூல்களைப் படிக்க விரு்மபுகின்றேன் என்றும் லீ மீங் அம்மையார் கூறினார்.

இவ்வாண்டின் துவக்கத்தில், "லீ மீங்கின் நாட்டுப்புறக் கதைகள்" என்ற புத்தகம், தா லியன் நகரின் மூன்றாவது தொகுதி பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

லீ மீங் அம்மையாரின் மூத்த மகள், சிறு வயதிலிருந்தே தாயின் கதைகளைக் கேட்டு, வளர்ந்தவர். அவரைப் பொறுத்தவரை, இக்கதைகளைக் கையேற்றும் கடமைக்குப் பொறுப்பேற்பது ஒரு புகழ் ஆகும்.

"எனது அம்மா அவருக்கு தெரிந்த கதைகளை எனக்கு சொல்லிக்கொடுத்து என்னை நன்னெறிப்படுத்தினார். இக்கதைகளை எனது மகனுக்கு சொல்லிக்கொடுக்கிறேன்" என்று லீ மீங் அம்மையாரின் மூத்த மகள் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040