• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சின்ச்சியாங்கின் களிமண் சிற்ப கலைஞர் Wang Zhong Min
  2014-06-27 12:40:33  cri எழுத்தின் அளவு:  A A A   
Wang Zhong Min என்பவர், சின்ச்சியாங்கில் களிமண் சிற்பக் கலைஞர் ஆவார். அவரது மேசையில் தனிச்சிறப்பு மிக்க களிமண் சிற்பங்கள் அதிக எண்ணிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. இன்றைய நிகழ்ச்சியில், Wang Zhong Minனின் சின்ச்சியாங் பாணி களிமண் சிற்பக் கலை பற்றி அறிமுகப்படுத்துகிறோம்.

Wang Zhong Minனின் சிற்பக் கலைப் பணிக் கூடம், சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் உருமுச்சி நகரின் Qi Fang தெருவில் இருக்கிறது. அவரது அறையிலுள்ள மேடையில் வைக்கப்பட்டுள்ள தத்ரூபமான அழகான களிமண் சிலை உருவங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட பண்டைய Turkestan நகர் உருவம், மக்களின் பெரும் கவனத்தை ஈர்க்கிறது. மறைபெருளான, பழமை வாய்ந்த இந்த நாட்டுப்புற கட்டிடங்கள், பாலைவனத்திலுள்ள கானல் நீர் காட்சிகளைப் போலத் தோற்றமளிக்கின்றன.

"இவை Turfan பிரதேசத்தில் உள்ள Tu Yu Gou நில அமைப்புகளும், Gao Tai நாட்டுப்புற வீடுகளும் ஆகும். இத்தகைய பழமை வாய்ந்த நாட்டுப்புற கட்டிடங்கள் பட்டு பாதை முழுவதும் காணப்படுகின்றன. இந்த வீடுகள் சின்ச்சியாங்கின் Turfan மக்கள் தலைமுறை தலைமுறையாக உருவாக்கிய கைவினை நுட்பங்களாகும். பழமை வாய்ந்த பொருட்களும், மலிவான பொருட்களும், உயிர்களுடன் தொடர்புடைய பொருட்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை" என்று Wang Zhong Min தெரிவித்தார்.

Wang Zhong Min சின்ச்சியாங்கின் உற்பத்தி மற்றும் கட்டுமான படைப் பிரிவின் ஒரு குடும்பத்தில் வளர்ந்தவர். இப்பிரிவின் உழைப்பாளியின் எளிமையான, நம்பிக்கையார்வம் மிகுந்த எழுச்சி, அவரது மனதில் ஆழப்பதிந்துள்ளது.

உற்பத்தி மற்றும் கட்டுமான படைப் பிரிவின் எழுச்சி, Wang Zhong Minனிடம் உறுதியான குணத்தை வளர்த்தது. சின்ச்சியாங் மீது பற்றுக் கொண்டு, Turkestan காதல் பாடல் இளவரசர் என்று அழைக்கப்படும் Wang Luo Binனின் களிமண் உருவம், Dong Bu La என்ற இசைக் கருவியை இசைப்பவரின் களிமண் உருவம் உள்ளிட்ட தலைசிறந்த கலை சிற்பப் படைப்புகளை அவர் உருவாக்கியுள்ளார்.

சாதாரண களிமண், Wang Zhong Minனின் கைகளில் வந்தவுடன், உயிர்த்துடிப்புடைய ஒரு சிற்பமாக, உருவமாக மாறி விடுகிறது. சின்ச்சியாங்கின் 13 சிறுபான்மை தேசிய இனங்களை கருப்பொருளாகக் கொண்டு, சீனாவின் பாரம்பரிய களிமண் சிற்பக்கலை நுட்பத்தைப் பயன்படுத்தி, அவர் சின்ச்சியாங்கின் நாட்டுப்புறப் பண்பாடுகளை முழுமூச்சுடன் காட்சிக்கு வைத்துள்ளார். இது சின்ச்சியாங்கின் பண்பாட்டு மரபுச் செல்வங்களை வெளிக்கொணர்ந்து, பாதுகாப்பதற்கு துணைபுரிவது மட்டுமல்லாமல், அங்குள்ள சுற்றுலா சந்தையையும் செழிப்பாக்கியுள்ளது.

சின்ச்சியாங்கின் சிறப்பு மிக்க நில அமைப்பு, Wang Zhong Min செய்த களிமண் சிற்பங்கள் மூலம் சிறப்பு மிக்க பண்பாட்டின் உயிர் நாடியைப் பரவல் செய்கிறது. இது சின்ச்சியாங்கின் கலை இரகசியத்தின் வெளிப்பாடாகும். அதாவது, சின்ச்சியாங்கின் களிமண் மற்றும் நீர் கொண்டு, சின்ச்சியாங் பாணியில் கலைப் பொருட்களை உருவாக்குவதாகும்.

1988ஆம் ஆண்டு, சின்ச்சியாங் கல்வி கல்லூரியின் நுண்கலை வகுப்பில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தான் அவரது வாழ்வில் பெரிய திருப்புமுனை. 11 ஆண்டுகளுக்கு பின், அவரது வணிக வடிவமைப்பு மற்றும் தயாரிப்புப் பணிக் கூடத்தை Wang Zhong Min நிறுவினார். உணவு விடுதியின் சன்னலில் சிற்பப் பொருட்களைக் காட்சிக்கு வைப்பது, கடைகளில் விளம்பரபடுத்துவது, கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு அலங்கரிப்பது ஆகிய பணிகளில் அவர் ஈடுபட்டார். 3 ஆண்டுகளில் Wang Zhong Min பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

"இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இத்தகைய வாழ்க்கை நடத்தத்தான் விரும்புகிறேன். நாள்தோறும் எனது வாழ்க்கை மேன்மை அடைந்து வருகின்றது" என்று அவர் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், சின்ச்சியாங்கில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சிறுபான்மை தேசிய இன பாணியுடைய பல்வகை சிற்பங்களையும், புகழ்பெற்ற சில கட்டிடங்களையும் வெளியூர் பயணிகள் கண்டு இரசிக்கின்றனர். Wang Zhong Min சிங்கியாங்கின் பல இடங்களில் பயணம் மேற்கொண்டு, பல நாட்டுப்புற வழக்கங்களைக் கண்டு இரசித்துள்ளார்.

"மண்பாண் சிற்பக் கலையையும், சிங்கியாங்கின் நாட்டுப்புற கலைகளையும் இணைக்க விரும்புகிறேன். நகரங்களின் சிற்பங்களைப் போல், இப்பிரதேசத்தின் உள்ளூர் கலைப் பொருட்களை உருவாக்க விரும்புகிறேன். சின்ச்சியாங்கின் அழகை வெளிப்படுத்தும் வேளையில், பயணிகளுக்குப் புதிய கருப்பொருட்களை தர விரும்புகின்றேன்" என்று Wang Zhong Min தெரிவித்தார்.

2005ஆம் ஆண்டு Quan Zhou, Xia Men ஆகிய இடங்களில் Wang Zhong Min சோதனை பயணம் மேற்கொண்டார். அந்த ஆண்டின் மே திங்கள் முதல் நாள், Wang Zhong Minனின் களிமண் சிற்பக்கலை பணிக்கூடம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. அவரது முதலாவது தொகுதி படைப்புகள் உருவாயின. இந்த தத்ரூபமான சிற்பங்கள் மக்களுக்கு வியப்பைத் தருகின்றன.

Wang Zhong Min தற்போது சீன கைவினை நுண்கலைஞர் சங்கத்தின் சிற்பக் குழு உறுப்பினர் ஆவார்.

கலைப் பாதையில் Wang Zhong Min உறுதியாக நிலைத்து நிற்கின்றார். தற்போது களிமண் சிற்ப கலைப்படைப்புகளைத் தயாரிப்பதற்கு குழந்தைகளுக்கு அவர் இலவசமாக கற்றுக்கொடுக்கிறார். களிமண், குழந்தைகளின் கைகளில் வெவ்வேறான உருவங்களாக மாறுவதைக் கண்டு, அவர் பெரும் மகிழ்ச்சி கொள்கிறார்.

"குழந்தைகள் நாட்டின் எதிர்கால தூண்களாக இருக்கின்றனர். களிமண் சிற்பங்களைத் தயாரிப்பதில் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க விரும்புகிறேன். அவர்கள் இணைய விளையாட்டுகளில் சிக்கிக்கொள்வதை நான் விரும்பவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

மேலதிக மக்களுக்கிடையே சின்ச்சியாங்கின் செழிப்பான கலையின் உயிர் நாடியைப் பரவல் செய்து, மேலும் ஆழமான கலைச் சூழலை உருவாக்கி, சின்ச்சியாங்கின் உள்ளூர் பண்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு, பொறுப்புணர்வு கொண்ட Wang Zhong Min தலைமை பங்காற்ற விரும்புகின்றார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040