• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அன்யாங் நகரில் பாரம்பரியப் பண்பாட்டுக் கடலில் மூழ்கும் ஒரு குடும்பம்
  2014-10-08 10:46:12  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் ஹெனான் மாநிலத்தின் அன்யாங் நகர், சீன வரலாற்றில் 7 வம்சங்களின் தலைநகராக இருந்தது. இந்நகரம் 3300 ஆண்டுகளின் வரலாறுடையது.

ஞாயிறு மறைந்தபின் காணப்படும் ஒளிப்பிழம்பில், இனிமையான இசையொலி ஒரு வீட்டிலிருந்து வீசுகிறது. தம்பதி வாங் ச்சி செங் மற்றும் வூ ச்சுவன், தங்களது மகள் வாங் சி ஹன் சீனப் பாரம்பரிய இசைக் கருவி Gu Zhengஐ இசைத்த இசையைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

வாங் சி ஹனுக்கு வயது 12. அவர் Gu Zheng இசைக்க கற்றுக்கொண்டு, 7 ஆண்டுகள் ஆகி விட்டன. ஒன்றரை ஆண்டுக்கு முன், அவர் Gu Qin (கு ச்சின்) இசைக்க கற்றுக்கொள்ள துவங்கினார். வாங் சி ஹன் கூறியதாவது:

"Gu Qin, Gu Zheng போன்ற சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகள், மேன்மையான சிந்தனையையும் ஒழுக்கங்களையும் உருவாக்கி மக்களுக்கு துணை புரியும். இக்கருவிகளை இசைப்பது, எனக்கு மன அமைதி தருகிறது" என்றார் அவர்.

தனது மகள் பற்றி குறிப்பிடும் போது, 40 வயதான தாய் வூ ச்சுவன் மிகவும் மனநிறைவு அடைகிறார்.

தற்போது, வாங் சி ஹன் Gu Zheng இசைக்கும் நிலை மிக உயர்வாக இருக்கிறது. தவிர, அவர் Gu Qin இசைக்கும் நிலை, பெரும் முன்னேற்றமடைந்துள்ளது. அவரது Gu Qin ஆசிரியர் வாங் சியன் துங் கூறியதாவது:

"அவர் விடாமுயற்சியுடன் இசைக் கருவிகளை இசைக்க கற்றுக்கொள்கிறார். அவரது பெற்றோர், சீனப் பாரம்பரியப் பண்பாட்டின் கையேற்றலுக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இத்துறையில் தனது குழந்தையை வளர்ப்பதில் பெரும் கவனம் செலுத்தியுள்ளனர்" என்றார் அவர்.

அதே வயதான குழந்தைகளை விட, வாங் சி ஹன் அமைதியான பண்பு கொண்டுள்ளார். அவரது பண்பு, அவரது குடும்பத்தின் கோலாகலமான பண்பாட்டுச் சூழலிலிருந்து பிரிக்கப்பட முடியாது.

வாங் சி ஹனின் தந்தை வாங் ச்சி செங் மற்றும் தாய் வூ ச்சுவன் சீனாவின் பழம்பெரும் பண்பாட்டை மிகவும் நேசிப்பவர். சீனப் பண்பாட்டுத் துறையில் இத்தம்பதி குறிப்பிட்ட சாதனைகளை பெற்றுள்ளனர்.

அன்யாங் நகரின் மாற்றப் புத்தக ஆய்வகத்தின் துணை தலைவராகவும், யீன் மற்றும் சாங் வம்ச ஆய்வகத்தின் துணை தலைவராகவும் வாங் ச்சி செங் பதவி ஏற்கிறார். அன்யாங் நகரில், நேர்த்தியான கையெழுத்து மற்றும் இயற்கைக் காட்சி ஒவியத் துறையில் அவர் புகழ் பெற்றவர். வூ ச்சுவன் பழம்பெரும் கவிதைகளை இயற்றுவதிலும், மலர் மற்றும் பறவைவகைகளை தீட்டுவதிலும் தேர்ச்சி பெற்றவர். அவர் இயற்றிய கவிதைகள் மற்றும் ஓவியப் படைப்புகள், இணையம் பயன்படுத்துவோரின் பாராட்டைப் பெற்றுள்ளன.

அன் யாங் நகரின் மூத்த பண்பாட்டு அறிஞர் யூ டான் யாங் கூறியதாவது:

"வாங் ச்சி செங் கை எழுத்து மற்றும் ஓவியத்துறையில் தனிச்சிறப்பு வாய்ந்த பாணியை உருவாக்கியுள்ளார். வூ ச்சுவன் மனிதர், சூழல் ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு கவிதை எழுதி, ஓவியம் வரைக்கின்றார்" என்றார் அவர்.

இணையம் பயன்படுத்துவோரின் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளதால், இவ்வாண்டு ஏப்ரல் திங்கள், சீன அஞ்சல் தலை சேகரிப்பு மையம் வூ ச்சுவனின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவரது கவிதைகளையும் ஓவியங்களையும் அஞ்சல் தலைகளிலும், அஞ்சல் அட்டைகளிலும் அச்சடித்தது.

பழம்பெரும் பண்பாட்டின் சூழலில் மூழ்குவதால், தமக்கு பெரும் இன்ப உணர்வு தருகிறது என்று வூ ச்சுவன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

"சிறு வயதிலிருந்தே பழம்பெரும் சீனப் பண்பாட்டில் பேரார்வம் கொண்டுள்ளேன். சீன பழம்பெரும் பண்பாட்டில் மக்களின் தார்மீக நிலை மற்றும் அன்பான உணர்ச்சியை ஆசைப்படுகிறேன். சீனப் பண்பாடு எனக்கு இன்ப உணர்வு தந்துள்ளது. இன்பம், மகிழ்ச்சியான வாழ்க்கை மீதான அனுபவமும் உணர்வும் ஆகும்"என்றார் அவர்.

இக்குடும்பத்தினர் மூவர் பணி அல்லது பள்ளிப் படிப்பு முடிந்த பின்னும், வார இறுதி நாட்களிலும், தாம் ஆர்வம் கொண்டுள்ள துறையில் ஈடுபடுகின்றனர். வூ ச்சுவன் கூறியதாவது:

"வார இறுதி நாட்களில், தாம் ஆர்வம் கொண்டுள்ள துறையில் ஈடுபட்டு வருகின்றோம். ஓவியம் வரைவது, கை எழுத்துக்களை எழுதுவது, கவிதைகளை படைப்பது போன்றவை" என்றார் அவர்.

கை எழுத்துக்களை எழுதுவது, ஓவியங்களை வரைவது, புத்தகங்களைப் படிப்பது ஆகியவை, அவர்களது வாழ்க்கையில் இன்றியமையாத பகுதியாக மாறியுள்ளன.

குடும்பத்தில் இந்த கோலாகலமான பண்பாட்டுச் சூழல், வாங் சி ஹனுக்கு அதிக செல்வாக்கினை தந்துள்ளது. வாங் சி ஹன் கூறியதாவது:

"ஓவியம் வரைய விரும்புகின்றேன். சீனப் பண்டைக்கால நூல்கள் பற்றி Nan Huai Jin என்ற சீனப் பண்பாட்டு பிரமுகர் எழுதிய நூல்களைப் எனது பெற்றோர் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நூல்களைப் படிக்கின்றேன். இந்நூல்களைப் படிப்பதன் மூலம், சீனப் பண்டைக்கால பிரமுகர்களின் விவேகம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கருதுகின்றேன்" என்றார் அவர்.

வாங் சி ஹன் மிக தலைசிறந்த குழந்தையாக இருக்கின்றார். சீனப் பழம்பெரும் இசைத் துறையில் அவர் காட்டியுள்ள திறமை, முயற்சிகள் மூலம் பெற்றுள்ள சாதனைகள் ஆகியவற்றைத் தவிர, பள்ளி படிப்பில் அவர் அதிக சாதனைகளைப் பெற்றுள்ளார்.

உண்மையில், வாங் ச்சி செங்கின் குடும்பம், அன்யாங் நகரில் சிற்றிருவ மாதிரியாக இருக்கிறது. பண்பாட்டுத் துறை பிரமுகர் யூ டான் யாங் கூறியதாவது:

"இக்குடும்பம் போன்ற கோலாகலமான பண்பாட்டுப் பாரம்பரியமுடைய குடும்பங்கள் அன்யாங்கில் அதிகம். வாங் ச்சி செங்கின் குடும்பம், அன்யாங்கில் பிரதிநிதித்துவம் வாய்ந்தது. இத்தகைய குடும்பங்கள், பண்பாட்டுடன் நெருக்கமான தொடர்பு உருவாக்கி, பண்பாட்டுச் சூழலில் வளர்ந்துள்ளது. இக்குடும்பம், அதிக குடும்பங்களின் வளர்ச்சி திசையையும், தற்போதைய இளைஞர்களின் மதிப்பு கண்ணோட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது" என்றார் அவர்.

அன்யாங், ஓட்டின் மேலான எழுத்துக்களின் பிறப்பிடமாக திகழ்கிறது. சில ஆயிரம் ஆண்டுகளுடைய பண்பாட்டுச் சூழல், இங்குள்ள பல தலைமுறை பண்பாட்டுத்துறை பிரமுகர்களை ஊட்டிவளர்த்து, சீனத் தேசப் பண்பாட்டின் எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040