• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் 2015 சர்வதேச வாகனக் கண்காட்சி
  2015-05-27 20:32:18  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏப்ரல் திங்கள் 20ஆம் நாள் முதல் 29ஆம் நாள் வரை, ஷாங்காய் மாநகரில் 2015 சர்வதேச வாகனக் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் உலகளவில் புகழ்பெற்ற வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய வகை வாகனங்களை வெளியிட்டு அதிக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவின் வாகனத்தயாரிப்புத் தொழில் நிறுவனங்களின் நிலைமை எப்படி உள்ளது? வரும் சில ஆண்டுகளில் எந்த வகை வாகனம் சந்தையில் வரவேற்கப்படும்?

சீன வாகனத் தொழில் சுங்கத்தின் மதிப்பீட்டின்படி, 2015ஆம் ஆண்டு சீனாவில் வாகன தயாரிப்பும் விற்பனையும் 2014ஆம் ஆண்டில் இருந்ததை விட 7 விழுக்காடு அதிகரித்து தலா இரு கோடியே 50 இலட்சத்தைத் தாண்டும். 2015 ஷாங்காய் வாகனக் கண்காட்சியில், தீவிரமான சந்தைப் போட்டியைச் சமாளிக்க சீனாவின் வாகனத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் பல புதிய வாகன வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

பெருஞ்சுவர் என்பது சீனாவின் வாகன சின்னங்களில் ஒன்றாகும். இவ்வாண்டின் கண்காட்சியில் இந்த வாகன தயாரிப்பு நிறுவனம் முக்கியமாக ஹாபோ SUV வாகன வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த இரு ஆண்டுகளில் பெருஞ்சுவர் கூட்டு நிறுவனம் மேலதிக புதிய வகை SUV வாகனங்களை ஆராய்ந்து தயாரிக்கும் என்று இக்கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் வாங் பேஃங்யிங் கூறினார்.

வளர்ச்சித் திட்டத்தை சரிபடுத்தியுள்ளோம். புதிய வகை SUV வாகனங்களை மட்டும் ஆராய்ந்து தயாரிப்போம் என்றார் அவர்.

மேலும் வாகனத் தர மேம்பாட்டுக்காக, தொழில் நுட்ப ஆராய்ச்சியில் அதிகமாக முதலீடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். தொழில் நுட்பப் புதுப்பித்தல் என்றுமே தனது கூட்டு நிறுவனத்தின் முதன் பணியாகும். சர்வதேச அரங்கில் ஹாபோ என்பதை புகழ்பெற்ற SUV சின்னமாக மாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

புதிய எரியாற்றல் வாகனத் தொழில், எரியாற்றல் சிக்கனம், சுற்றுச்சூழல் மாசற்ற எரியாற்றல் ஆய்வு முதலியவற்றை சீன அரசு நெடுநோக்கு வளர்ச்சித் திட்டத்தில் சேர்த்துள்ளது. அதன்படி பல வாகனத் தயாரிப்புத் தொழில் நிறுவனங்கள் தங்களது வளர்ச்சித் திட்டத்தைச் சரிப்படுத்தியுள்ளன.

2015 ஷாங்காய் வாகனக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட தங்களது வாகனங்கள் அனைத்தும் புதிய எரியாற்றல் பயன்படுத்தும் வாகன வகையாகும் என்று BYD வாகனக் கூட்டு நிறுவனத்தின் பொது உறவு பிரிவின் தலைவர் தூ கோசுங் கூறினார்.

காட்சிக்கு வைக்கப்படும் அனைத்து வாகனங்களும் புதிய எரியாற்றல் வாகனங்களாகும். மொத்தம் 9 வகைகள். BYD சீனாவின் வாகனச் சின்னமாகும். ஆகவே, அவற்றுக்கு சீனப் பாணியுடைய பெயரை சூட்டினோம். அவை சீனா தயாரிப்பு என்று அனைவரையும் அறிய இவ்வாறு செய்கின்றோம் என்றார் அவர்.

சீனச் சந்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்களின் செயல்கள் என்ன?

பெய்ஜிங் வாகனத் தயாரிப்பு நிறுவனமும் ஒரு இத்தாலி நிறுவனத்துடன் ஒத்துழைத்து உலக முன்னேறிய தொழில் நுட்பம் கொண்ட புதிய வகை மின்னாற்றல் வாகனம் பற்றி ஆராய்ந்து வருகிறது. இந்த வாகனங்களின் வெளிப்புற உபகாரங்கள் முழு-அலுமினியம், கார்போஃபார்ம், கலவைத் தனிமங்களால் ஆன பொருள் ஆகியவற்றால் தயாரிக்கப்படும்.

இதுவரை உலகளவில் இத்தகைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் வாகனங்கள் இரண்டு மட்டும். ஒன்று BMW வாகனத்தின் I 3, மற்றொன்று அமெரிக்க டஸ்லாவின் MODEL S. சீனா தயாரிப்பு மற்றும் உலக மிக முன்னேறிய மின்னாற்றல் வாகனத் தொழில் நுட்பம் இணைக்கும் மாபெரும் வெற்றியாக இது மாறும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

2015 ஷாங்காய் வாகனக் கண்காட்சியில் மொத்தமாக புதிய எரியாற்றல் பயன்படுத்தும் 103 வகை வாகனங்கள் காண்பிக்கப்பட்டன. அவற்றில் மின்னாற்றலை சேமித்து வைக்க்க் கூடிய ரகத்திலான கார்கள் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளன. ஆடி, BMW, ஓல்ஒ முதலிய வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய எரியாற்றல் வாகனங்களை இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளன.

இந்த ஓல்ஓ வாகனம் மிகவும் தனிச்சிறப்புடையது. ஓட்டுநர்களுக்கு 3 தேர்வுகள் உண்டு. முற்றிலும் மின்னாற்றல் பயன்படுத்தலாம். எப்படியென்றால், இதில் மாசு காற்று ஒன்றுமே வெளியாது. வேகத்தை விரும்பியவர் இந்த கார் முலம் விருப்பத்தை நனவாக்கலாம். 0 முதல் 100 மீட்டர் வரையான முடுக்கம் அடைய அதற்கு 5.2 வினாடி மட்டும் தேவை. நெடுஞ்தூரப் பயணம் மேற்கொள்ளும் போது மின்னூட்ட வசதி கிடைப்பது கடினம். அப்போது பெட்ரோலியத்தைப் பயன்படுத்தலாம்.

தற்போது, காற்றுத் தரத்துக்காக சீன அரசு புதிய எரியாற்றல் வாகனங்களுக்கு மானியம் வழங்குகின்றது. புதிய தொழில் நுட்பம் மற்றும் அரசின் கொள்கையின் செல்வாக்குடன் இத்துறை சீனாவில் வேகமான வளர்ச்சி அடைவது உறுதி என்று நம்புகின்றோம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040