• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இணையக் கருத்துக் கணிப்பு!
  2015-08-19 18:54:18  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜப்பானின் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 70ஆம் ஆண்டு நிறைவு தொடர்பான இணையக் கருத்துக் கணிப்பு:

2015ஆம் ஆண்டு, ஜப்பானின் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 70ஆம் ஆண்டு நிறைவாகும். இது பற்றி உங்களுடைய கருத்தை அறிய, சீன வானொலி நிலையம், உலக அளவிலுள்ள நண்பர்களிடம் இணையக் கருத்துக் கணிப்பை மேற்கொள்கிறது. இதில் நீங்கள் கலந்துகொள்வதற்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கின்றோம்.

வினாக்கள்(முதல் பகுதி):

1. உங்கள் வயது

a. 35க்குள்

b. 35-50வரை

c. 50க்கு மேல்

2. கல்வி நிலைமை

a.மேனிலைப் படிப்புக்குள்

b.இளங்கலைப் பட்டம்

c.முதுகலைப் பட்டம்

d.முதுகலைப் பட்டத்திற்கு மேல்

3. எந்தெந்த நாடுகளில், உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நடவடிக்கை நடைபெறுகிறது என்பது தொடர்பான தகவல்களை அறிந்துள்ளீர்களா?

a. பிரான்ஸ்

b. அமெரிக்கா

c. பிரிட்டன்

d. ரஷியா

4. உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 70ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்ட நடவடிக்கையை நடத்துவதன் முக்கியத்துவம் என்ன?

a. வரலாற்றை நினைவில் வைத்திருத்து, இளைஞர்களுக்கு வரலாற்றை நினைவு கூற்வது

b. இராணுவ வெறி மீண்டும் தலைதூக்காமல் தவிர்ப்பது

c. 2ஆவது உலகப் போரில் வெற்றி பெற்ற சாதனைகளைப் பேணிக்காப்பது

d. உலக பாசிச எதிர்ப்புப் போரின் வெற்றியைக் கொண்டாடுவது

5. போஸ்டான் சுற்றறிக்கை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

a. 1945ஆம் ஆண்டு ஜுலை 26ஆம் நாள், அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகியவை போஸ்தான் சுற்ற்றிக்கையை வெளியிட்டு, நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று ஜப்பானை வற்புறுத்தின.

b. ஐப்பான் ஆக்கிரமிப்புப் போர்த் தொடுத்ததை உறுதிசெய்த முக்கிய சான்று ஆவணம் இதுவாகும்.

c. 2ஆவது உலகப் போரில் மனித குலம் கடும் பதிலளித்து, தீமையைத் தோற்கடித்து வெற்றி பெற்ற சான்று.

6. 2ஆவது உலகப் போர் பற்றி ஜப்பானும் ஜெர்மனியும் எந்தெந்த கருத்துக்களைத் தெரிவிக்கின்றன?

a. யசுகுனி கல்லறையில் ஜப்பான் வழிபாடு செய்து போர் குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது

b. ஆக்கிரமிப்புப் போரின் உண்மையை ஜப்பான் ஏற்றுக்கொள்ளாத நிலை

c. 1970ஆம் ஆண்டு வோர்சோ நகரிலுள்ள யூதர் கல்லறைக்கு முன் ஜெர்மன் தலைமை அமைச்சர் புரேன்ட் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.

d. ஹிட்லர் ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கியதை ஜெர்மனியைச் சேர்ந்த பல்வேறு அரசுகள் ஏற்றுக்கொண்டு அதனால் பாதிக்கப்பட்ட நாடுகளின் மக்களிடம் மன்னிப்பு கேட்டு வருகின்றன.

7. உலகப் பாசிச எதிர்ப்புப் போரில் சீனாவின் தகுநிலையும் பங்கும் பற்றி

a. ஜப்பானிய ராணுவ வெறியைத் தோற்கடிதத்தில் சீனா முதன்மை பங்காற்றியுள்ளது.

b. 2ஆவது உலகப் போரில் சீனா முக்கிய போர்தளமாகும். மேலும், உலகப் பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்றதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

c. போருக்குப் பிந்திய புதிய உலக ஒழுங்கை நிறுவுவதில் சீனா முக்கிய பங்காற்றியுள்ளது.

8. ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்ன?

a. சீன மக்கள் நெருக்கமாக ஒன்றுபட்டது

b. அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டுகளை வீசியது

c. சோவியத் யூனியனைச் சேர்ந்த செம்படை சீனாவின் வடகிழக்கு பகுதிக்கு ஆதரவு அளித்தது

d. சீன நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் வலுவடைந்தது

9. அமைதி மற்றும் வளர்ச்சி, சர்வதேசச் சமூகத்தின் பொது விருப்பமாகும். எதிர்காலத்தில், போர் நிகழ்வதை எவ்வாறு தவிர்க்க வேண்டும்?

a. பல்வேறு நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமாகக் கவனம் செலுத்த வேண்டும்

b. சுற்றுப்புற நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டும்

c. பாதுகாப்பு ஆற்றலை வலுப்படுத்தி, தகவல் தொழில்நுட்பங்களை உயர்த்த வேண்டும்

d. ஐ.நாவின் பங்கை வெளிப்படுத்தி,, அமைதிக்காகப் பாடுபட வேண்டும்

e. அமைதி மற்றும் வளர்ச்சி கொண்ட புதிய உலக ஒழுங்கை வெகு விரைவில் உருவாக்க வேண்டும்

10. சீன வானொலி நிலையத்தின் எந்த மேடையின் மூலம், ஜப்பானின் ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான சீன மக்களின் போராட்டம் மற்றும் உலகப் பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 70ஆவது ஆண்டு நிறைவு பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா?

a. ஒலிபரப்பு

b. இணையதளம்

c. நிகழ்பட நிகழ்ச்சி

d. சமூக செய்தி ஊடகங்கள்

e. தொலைபேசி

f. செய்திதாள் மற்றும் இதழ்

தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விமர்சனம்(2-வது பகுதி):

1. ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கான சீன மக்களின் எதிர்ப்புப் போர் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போரின் வெற்றி குறித்து, சீனா மேற்கொண்ட நினைவு நடவடிக்கைகளின் முக்கியத்துவம் என்ன?இது பற்றி உங்களின் கருத்து.

2. இரண்டாவது உலக போருக்குப் பிந்தைய 70 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி உங்களின் தாய்நாட்டுக்கு எந்தெந்த செல்வாக்கினைக் கொண்டு வந்துள்ளது?இது குறித்து உங்களின் சொந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்.

3. ஆசியா ஏன் உலக வளர்ச்சியின் புதிய நிலைமையினை உருவாக்குவதற்கு சீனாவும் ஜப்பானும் எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்?

4. நீங்கள் கவனம் செலுத்தும் வேறு பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகள் பற்றி எழுதுங்கள்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040