• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய்: நாணய மையம்
  2016-06-17 18:56:05  cri எழுத்தின் அளவு:  A A A   

யாங்ச்சி ஆற்றுக் கழிமுகத்தில் அமைந்துள்ள ஷாங்காய் மாநகரம், சீனப் பெருநிலப்பகுதியின் பொருளாதார, நாணய, வர்த்தக மற்றும் கடல் போக்குவரத்து மையமாக விளங்குகிறது. 2010ஆம் ஆண்டு உலகப் பொருட்காட்சி இம்மாநகரில் வெற்றிகரமாக நடைபெற்ற பின், ஷாங்காய் பற்றி மக்கள் அதிகமாக அறிந்து கொண்டு வருகின்றனர். இதனால் ஈர்ப்பாற்றல் மிக்க சுற்றுலா நகரமாகவும் ஷாங்காய் மாறியுள்ளது.

சீன அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள மாநகரான ஷாங்காய், உலகளவில் ஒளிவீசும் மாநகரமாகவும் திகழ்கிறது. வரலாற்றுப் பண்பாட்டுச் சிறப்பும் நவீன நகர நறுமணமும் அது கொண்டுள்ளது. அதன் மையப் பகுதியில், 9 பிரதேசங்களும், புறநகரில் 8 பிரதேசங்களும் ஒரு மாவட்டமும் உள்ளன. மார்ச் முதல் மே திங்கள் வரையில் வசந்தகாலமும், செப்டம்பர் முதல் நவம்பர் திங்கள் வரையில் இலையுதிர்காலமும் ஷாங்காய் மாநகரில் சுற்றுலா செய்வதற்கு நல்ல பருவங்களாகும்.

ஷாங்காய் மாநகரில் பயணம் மேற்கொள்ளும் போது, வெய்தான், வணிக வீதி, மேலை நாட்டு பாணியுடைய பழைய வீடு, பு தோங் பிரதேசத்திலுள்ள லு ஜியா ச்சுய், ஹேங் ஷான் வீதி, தோ லுன் வீதி, ஷி கு மென் எனப்படும் ஷாங்காய் தனிச்சிறப்புடைய பொது மக்கள் குடியிருப்பு, யு யுவான் பூங்கா, சூ ஜியா ஹுய் இடத்திலுள்ள கதோலிக்க தேவாலயம், ஷே ஷான் தேசிய சுற்றுலா விடுமுறை போக்கிடம் உள்ளிட்டவை உங்கள் பயணத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040