• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவாங்சோ
  2016-06-17 18:54:34  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் தென்பகுதியிலுள்ள குவாங் சோ மாநகர், வரலாற்று பண்பாட்டுடன் கூடிய நவீனமயமான பெரிய நகரமாகும். அது, சீனாவில் மிக முன்னதாகவே வெளிநாட்டுகளுக்கு வணிக நுழைவாயிலாக திகழ்ந்தது.

குவாங்சோ மாநகரின் மத வரலாறு வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. புத்த மதம், தெள மதம், இஸ்லாமிய மதம், கத்தோலிசம், கிறிஸ்துவம் ஆகிய 5 மதங்கள், இம்மாநகரில் முக்கியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. குவாங் சோவின் பழைய மைய அச்சுவில், மேற்கூறிய 5 மதங்களைச் சேர்ந்த சுமார் பத்து முக்கிய கோயில்கள், பள்ளிவாசல்கள் மற்றும் ஆலயங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மதப் பண்பாடு, இம்மாநகரின் பண்பாட்டுடன் ஒன்றிணைக்கும் தனிச்சிறப்பு மானிடப் பண்பாட்டியல் காட்சியை இது வெளிப்படுத்துகின்றது.

குவாங் சோ, குவாங் தூங் மாநிலத்தில் அமைந்துள்ளது. கண்டோனிஸ் இசை நாடகம், ஹான் தேசிய இனத்தின் பாரம்பரிய இசைகளில் ஒன்றாகும். தற்போது, குவாங் தூங் மாநிலம், ஹாங்காங், மக்கெள, வெளிநாட்டிலுள்ள சீனர் குடியிருப்புப் பகுதி ஆகியவற்றில், இந்த இசை நாடகம் விரிவான முறையில் வரவேற்கப்பட்டு வருகின்றது. இது, குவாங் தூங்கின் பண்பாட்டில் முக்கிய தகுநிலையைக் கொண்டுள்ளது. 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் நாள், கண்டோனிஸ் இசை நாடகம், யுனெஸ்கோவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

குவாங் தூங் மாநிலத்தின் தலைநகரான குவாங் சோ மாநகரில் நடைபெற்று வரும் வசந்தகாலத்தை வரவேற்கும் மலர் சந்தை, குவாங் தூங் மாநிலத்தில் ஹான் இன மக்களின் பாரம்பரிய பண்பாட்டு விழாவாகும். குவாங் சோ மாநகர வாசிகளுக்கு, இது ஒரு கேளிக்கைக் கொண்டாட்டமாக கருதப்படுகின்றது. கம்கோட், பீச் மலர்கள், ஆஸ்போடெல் ஆகியவை, இந்த மலர் சந்தையில் நகரவாசிகளால் மிகவும் வரவேற்கப்படும் செடிகளாகும்.

கண்டோனிஸ் பாணி உணவு வகை, குவாங் தூங் மாநிலத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த உணவுப் பொருட்களுடைய தனச்சிறப்புகளின் அடிப்படையில் உருவாக்கியது. கண்டோனிஸ் பாணி உணவுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் பலதரப்பட்டவை. சமையல் வழிமுறைக்கான கோரிக்கை அதிகம். உணவுப்பொருட்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

குவாங் சோ நகரவாசிகளுக்கு தேயிலை மிகவும் பிடிக்கும். குறிப்பாக, காலையிலே, அவர்கள் தேநீரை அருந்தி, சிற்றுண்டிகளைச் சாப்பிடும்போது, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பேசுவது அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040